பதிவு செய்த நாள்
14 ஜூன்2012
16:05
ஆடி கார் நிறுவனம், இந்தியாவில், ஏ4, ஏ6, ஏ7 மற்றும் க்யூ5, க்யூ7 ஆகிய மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது, எஸ்4 என்ற புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.45.31 லட்சம்( எக்ஸ் ஷோரூம் மஹாராஷ்டிரா). பெட்ரோலில் இயங்கும் இந்த காரில், வி 6 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஐந்து வினாடிகளில், 100 கி.மீ., வேகத்தை தொட்டுவிடும் திறன் படைத்தது.
இதற்கு அடுத்ததாக, க்யூ 3 காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.26.21 லட்சத்தில் இருந்து ரூ.31.49 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம், மஹாராஷ்டிரா) என அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில், 500 கார்கள் மட்டுமே முன்திவுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில், 2.0 டிடிஐ குவாட்ரோ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|