தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்புதேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு ... "சரக்கு' விலையை உயர்த்த அரசு முடிவு: பட்டியல் தயார் "சரக்கு' விலையை உயர்த்த அரசு முடிவு: பட்டியல் தயார் ...
விசைத்தறி ஜவுளி ஏற்றுமதியில் சுணக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
00:57

திருப்பூர்:விசைத்தறி ஜவுளி ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் சுணக்கத்தால், உற்பத்தியான ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.காடா துணி:திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில், விசைத்தறிகள் அதிகளவில் உள்ளன. ஏறத்தாழ 2 லட்சம் விசைத்தறிகள், காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
இதில் 10 முதல் 15 சதவீத விசைத்தறிகளில், வேட்டி சேலை ரகங்களும், 25 சதவீத விசைத்தறிகளில் சர்ட்டிங் மற்றும் சூட்டிங் ரகங்களும், 60 சதவீத தறிகளில் பிற ரக காடா துணிகளும் உற்பத்தியாகிறது.இவை,பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வட மாநில வியாபாரிகள் இவற்றை வாங்கிச் சென்று, "பிராசசிங்' செய்து ஏற்றுமதி செய்கின்றனர்.
இப்பகுதியில், 30க்கு 30 ரகம், 50 அங்குல அகலம் கொண்ட 135 கிராம் எடையுள்ள துணிகள், நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. சில மாதங்களாக, ஏற்றுமதியில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
ஜவுளி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:கடந்த சில மாதங்கள் வரை, மீட்டர் 27.50 ரூபாய்க்கு விற்பனையானது. நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தற்போது வர்த்தக சூழ்நிலை சீராக இல்லை. இதனால், இதன் விலை மீட்டருக்கு 3 ரூபாய் குறைந்து 24.50 ரூபாய்க்கு கேட்கப்படுகிறது.இந்த துணி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 30 ரகம் வார்ப் நூல்,
50 கிலோ எடையுள்ள மூட்டை 7,500 ரூபாயில் இருந்து 7,900 ஆகவும், வெப்ட் நூல் 8,500 ரூபாயில் இருந்து 8,900 ஆகவும், மூட்டைக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது.
உற்பத்தி செலவு:துணியின் விற்பனை விலை குறைந்துள்ள அதே நேரத்தில், நூலிழை விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் இரண்டு நிலையிலும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.சுற்றுச் சூழல் மாசு பிரச்னையால், "பிராசசிங்' பணிகளும் தொய்வடைந்துள்ளன. இதனால், வடமாநில வியாபாரிகள் துணி வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
அமெ­ரிக்க மத்­திய வங்கி, அந்­நாட்­டில் நில­வும் வட்டி விகி­தத்தை, சமீ­பத்­தில் உயர்த்தி உள்­ளது. எல்­லா­ரும் ... மேலும்
business news
ல­கில், சொகுசு கார் ரசி­கர்­கள் மத்­தி­யில், இத்­தா­லி­யைச் சேர்ந்த, மச­ராட்டி நிறு­வ­னத்­திற்கு, தனி இடம் ... மேலும்
business news
இந்­திய மோட்­டார் வாகன சட்­டப்­படி, கார் ஓட்­டு­னர் மற்­றும் பய­ணி­யர், ‘சீட்­பெல்ட்’ அணி­வது கட்­டா­யம். அது, ... மேலும்
business news
பியட் ஜூன் 19,2012
‘ஜீப், காம்­பஸ்’ எஸ்.யு.வி.,‘பியட்’ நிறு­வ­னத்­தின், ‘ஜீப்’ வரிசை வாக­னங்­களில் ஒன்­றான, காம்­பஸ், எஸ்.யு.வி., ... மேலும்
business news
என்­பீல்டு ஜூன் 19,2012
15 வினா­டி­களில் விற்று தீர்ந்­ததுஎன்.எஸ்.ஜி., எனும், தேசிய பாது­காப்பு படை­யின், கறுப்பு கமாண்டோ வீரர்­கள், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)