பதிவு செய்த நாள்
21 ஜூன்2012
13:46
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த நிறுவனம், மேஸ்ட்ரோ 110 சிசி என்ற ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. தற்போது "இக்னிடர்' என்ற பெயரில், 125 சிசி மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.55,900 (எக்ஸ் ஷோரூம், டில்லி). டிரம் பிரேக், டிஸ்க் பிரக் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இரண்டு வேரியன்களிலும், செல்ப் ஸ்டார்ட் வசதி உண்டு. பைக்கில், 125 சிசி திறன் கொண்ட ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்டது. ஹோண்டாவின் சிபி ஸ்டன்னர் பைக்குக்கு இணையானது இந்த பைக். பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டிஸ்கவர் 125 பைக்குக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இக்னிடர்' பைக், நான்கு வண்ணங்களில் கிடைக்கும். இதுதவிர, 125 சிசி பிரிவில், சூப்பர் ஸ்பெலண்டர், கிளாமர் என்ற இரண்டு பைக்குகளை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக, 110 சிசி திறன் கொண்ட பேஷன் எக்ஸ்ப்ரோ என்ற புதிய பைக்கை, இந்த நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|