கேடர் பில்லர் நிறுவனம் 800 கோடி ரூபாய் முதலீடுகேடர் பில்லர் நிறுவனம் 800 கோடி ரூபாய் முதலீடு ... ஐசிஐசிஐ பேங்க்கின் புதிய எம்.டி.,யாக சந்தா கோச்சர் நியமனம் ஐசிஐசிஐ பேங்க்கின் புதிய எம்.டி.,யாக சந்தா கோச்சர் நியமனம் ...
டிசம்பர் 21ம் தேதிக்காக தாஜ், டிரைடன்ட் ஹோட்டலில் குவியும் ரிசர்வேஷன் ஆர்டர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2008
09:53

மும்பை : மும்பையில் இருக்கும் தாஜ் மற்றும் டிரைடன்ட் ஹோட்டல்களில் டிசம்பர் 21ம் தேதிக்கு என்ன மெனு வைக்கலாம் என்று அங்குள்ள சமையல் கலைஞர்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தாஜ் ஹோட்டல் நிர்வாகமோ, அவர்களுக்கு வர இருக்கும் விருந்தினர்களை அழைத்து வர சொகுசு காரான ஜாகுவாரை கூட தயாராக வைத்திருக்கிறது. இதெல்லாம் எதற்கு என்றால் தீவிரவாத தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இந்த இரு ஹோட்டல்களும், சுமார் ஒரு மாத இடைவேளைக்குப்பின் வரும் 21ம் தேதி தான் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. ஒரு மாதத்திற்குப்பின் ஹோட்டல் செயல்பட ஆரம்பிப்பதால், அன்று வரும் விருந்தினர்களை எப்படியெல்லாம் கவனிக்கலாம் என்று சதா ஆலோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போதே அந்த இரு ஹோட்டல்களின் ரெஸ்டாரன்ட்களிலும், இருக்கைகளுக்காக ரிசர்வேஷன் ஆர்டர்கள் வந்து குவிந்து கொண்டேருப்பதாக சொல்கிறார்கள். டிரைடன்ட் ஹோட்டலின் <உரிமையாளர்களான ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸின் உயர் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைந்திருக்கும் அதிகப்படியான அன்பை நினைக்கும்போது மெய்சிலிர்த்து போகிறோம். டிசம்பர் 21ம் தேதி எங்கள் ரெஸ்ட்டாரன்ட் மீண்டும் துவங்கும் போது அது நிரம்பி வழியும் என்று தெரிகிறது என்றார்.எங்கள் ஹோட்டலில் ' ஃபிராங்கிபானி ', ' இந்தியா ஜோன்ஸ் ', ' ஓபியம் டென் ', ' வெராண்டா ' என்ற நான்கு ரெஸ்டாரன்ட்கள் இருக்கின்றன. இந்த நான்குமே நிரம்பிக்கொண்டிருக்கின்றன. டிசம்பர் 31ம் தேதி வரை மட்டும் நாங்கள் ரிசர்வேஷன் ஆர்டர்களை இப்போது வாங்கிக்கொள்கிறோம் என்றார் அவர். தாஜ் ஹோட்டலை பொருத்தவரை, அதன் புது கட்டிடமான டவர் பில்லிங்கில் இருக்கும் ' த ஜோடியாக் கிரில் ', ' சவுக் ', ' மசாலா கிராப்ட் ', ' அக்குவாரிஸ் ', ' ஷாமியானா ', ' ஸ்டார் போர்ட் ', ' லா பேட்டிசரி ' ஆகிய 7 ரெஸ்ட்டாரன்ட்களும் டிசம்பர் 21ம் தேதி மாலை 7.30 மணியில் இருந்து திறந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். பாரம்பரியமிக்க தாஜ் ஹோட்டலின் பழைய கட்டிடம் இன்னும் தயாராகாததால், அது திறக்கப்பட இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாத கால இடைவேளைக்குப்பின் வரும் விருந்தினர்களுக்காக இரு ஹோட்டல்களுமே மெனுவில் சில அயிட்டங்களை கூடுதலாகவும் சேர்க்க இருக்கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)