ஒரே நாளில் சவரனுக்கு ரூ.728 சரிந்த தங்கம் விலைஒரே நாளில் சவரனுக்கு ரூ.728 சரிந்த தங்கம் விலை ... வங்கி துவங்க உரிமம் கோரிஅஞ்சல் துறை விண்ணப்பம் வங்கி துவங்க உரிமம் கோரிஅஞ்சல் துறை விண்ணப்பம் ...
மாம்பழக்கூழ் "ஆர்டர்' கிடைத்தும் ஏற்றுமதி செய்ய இயலாமல் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2013
00:07

தமிழக மாம்பழக் கூழுக்கு, கூடுதலாக, 100 சதவீதம், ஏற்றுமதி ஆர்டர் குவிந்துள்ளது. ஆனால், "பேக்கிங்' செய்ய அரபு நாடுகளில், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால், ஏற்றுமதியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.உலக அளவில், 63 நாடுகளில், மா மரங்கள் உள்ளன.இந்தியாவில், 1.90 கோடி டன் மாம்பழம் உற்பத்தியாகிறது.தமிழகத்தில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பில், மா சாகுபடி நடக்கிறது.
முதலிடம்:தமிழக அளவில்,மாம்பழ உற்பத்தியில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், முதலிடம் வகிக்கின்றன. இங்கு சாகுபடியாகும், தோத்தாபுரி, அல்போன்சா மற்றும் ராஸ்புரி ரகங்கள், 40 சதவீதம் மாம்பழக்கூழ் தயாரிக்க பயன்படுகிறது. மாம்பழக்கூழ் உற்பத்திக்கு, இங்கு, 60 தொழிற்சாலைகள் உள்ளன.
சீசனில், 80 ஆயிரம் டன் மாம்பழங்களில் இருந்து, 40 ஆயிரம் டன், மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 90 சதவீதம், சவுதி அரேபியா, துபாய், ஏமன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும், மாம்பழ பருவ காலத்தில், 75 நாட்கள் மட்டுமே, மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளில், உற்பத்தி நடக்கும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தொழிற்சாலைகளுக்கு, கடந்த ஆண்டு, 75 ஆயிரம் டன் மாம்பழக்கூழ் ஏற்றுமதி செய்ய "ஆர்டர்' கிடைத்தது. இது, இந்த ஆண்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன்னாக அதிகரித்துஇருந்தது.
பருவமழை தவறியதால், மாம்பழத்தின் தரம் குறைந்துள்ளது. இதனால், கர்நாடக மாநிலம், கோலார், ஆந்திர மாநிலம், பாங்காரு பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து, மாம்பழங்களை, கொள்முதல் செய்து, தொழிற்சாலைகளுக்கு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தினமும், 3,000 டன் வரை, இப்படி கொள்முதல் செய்யப்படுகிறது.
கட்டுப்பாடு:இப்படி, மாம்பழக்கூழ் தயாரித்த போதிலும், அரபு நாடுகளில், "பேக்கேஜ்' விதிகளில், தகர டப்பாவை பயன் படுத்துவதில், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், போதுமான, "ஆர்டர்' இருந்தும், ஏற்றுமதியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சில நிறுவனங்கள், 220 முதல் 250 லிட்டர் கொள்ளளவுள்ள, பிளாஸ்டிக் பேரல்களில், மாம்பழக்கூழை நிரப்பி விற்பனைக்கு அனுப்புகின்றன.
சீனாவில் கிராக்கி: சீன இறக்குமதியாளர்கள், தமிழகத்தில் இருந்து, அதிக அளவில், மாம்பழக்கூழ் கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அரபு நாடுகளிலும், தமிழக மாம்பழக்கூழுக்கு, அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது. புதிய கட்டுப்பாடு காரணமாக, அடுத்த ஆண்டு முதல், பிளாஸ்டிக் பேரல்களில், மாம்பழக்கூழ் அடைத்து, விற்க, உற்பத்தி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
- நமது நிருபர்-

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் தொடர்ந்து 2 வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் ... மேலும்
business news
புதுடில்லி : மத்­திய அரசு, திவால் சட்ட திருத்­தத்­திற்கு அளித்­துள்ள ஒப்­பு­தலை, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் ... மேலும்
business news
இந்­தி­யா­வில், இன்­டர்­நெட் தொலை­பே­சியை, பி.எஸ்.என்.எல்., விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது என, அதி­கா­ரி­கள் ... மேலும்
business news
வாஷிங்டன் : வாக­னங்­கள் இறக்­கு­ம­தி­யால், உள்­நாட்டு பாது­காப்­பிற்கு பாதிப்பு ஏற்­ப­டு­கி­றதா என்­பது ... மேலும்
business news
சென்னை : தனி­யார் துறை­யைச் சேர்ந்த, சிட்டி யூனி­யன் வங்­கி­யின் நிகர லாபம், 2017 – -18ம் நிதி­யாண்­டின், ஜன., – மார்ச் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)