முன்பேர வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடியாக குறைந்ததுமுன்பேர வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடியாக குறைந்தது ... மருந்து துறையில் ஆறு அன்னிய நேரடிமுதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி மருந்து துறையில் ஆறு அன்னிய நேரடிமுதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி ...
டேப்லெட் கம்ப்யூட்டர்விற்பனை 102 சதவீதம் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
03:23

புதுடில்லி:இந்தியாவில், டேப்லெட் கம்ப்யூட்டர் விற்பனை, நடப்பு 2013-14ம் நிதியாண்டில், 102 சதவீதம் வளர்ச்சி காணும் என, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எம்.ஏ.ஐ.டி.,) தெரிவித்துள்ளது.தற்போதைய நிலையில், குறைந்த எடையில், மிகவும் எளிதாக எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையிலான கம்ப்யூட்டர்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையடுத்து, உள்நாட்டில், நடப்பு நிதியாண்டில், டேப்லெட் கம்ப்யூட்டர் விற்பனை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதனை எடுத்துக்காட்டும் விதமாக, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 19 லட்சமாக இருந்த, டேப்லெட் கம்ப்யூட்டர் விற்பனை, நடப்பு நிதியாண்டில், 100 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டு, 38.40 லட்சமாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், டேப்லெட் கம்ப்யூட்டர்கள் விற்பனை, வெறும், 3.60 லட்சம் என்ற அளவிற்கே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதேசமயம், நடப்பு நிதியாண்டில், சாதாரண கம்ப்யூட்டர்களின் விற்பனை, 8 சதவீதம் என்ற அளவிற்கே அதிகரித்து, 1.12 கோடியிலிருந்து, 1.21 கோடியாக உயரும் என, எம்.ஏ.ஐ.டி., மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)