பூட்டானுக்கு மானிய விலை காஸ்பூட்டானுக்கு மானிய விலை காஸ் ... ஆடம்பர பொருள்கள் மீதான வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் ஆடம்பர பொருள்கள் மீதான வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் ...
"தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
12:13

மதுரை: "உங்களை நாடுவதையும், நீங்கள் தேடுவதையும்' தரும், "தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி, மதுரை தமுக்கம் மைதானத்தில், நாளை (ஆக., 1)கோலாகலமாக துவங்குகிறது. மதுரையில் "இரண்டாவது சித்திரை திருவிழா' என பெயர் பெற்ற, "தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி, உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, நாளை துவங்கி, ஆக., 5 வரை நடக்கிறது. 300க்கும் மேற்பட்ட குளுகுளு "ஏசி' ஸ்டால்களில், நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழலாம். வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த தயாரிப்புகள், கண்காட்சியில் இடம் பெற உள்ளன. குடும்பங்கள் தமுக்கத்தில் குடியேறும் "கண்காட்சி' என்பதால், இம்முறையும் உங்களை அசத்தும் அம்சங்கள், ஏராளமாக உள்ளன. ஒரே கூரையின் கீழ், "3 இன் 1' முறையில், கண்காட்சி, கட்டடக்கலை, ஆட்டோமொபைல் என, விதவிதமாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறியவர் முதல் முதியவர் வரை, "ஷாப்பிங்' செய்ய ஏற்ற வகையில் ஸ்டால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரமும் சரி, காரும் சரி, உங்கள் விழிகளிலிருந்து எதுவும் தப்பாது. உங்கள் வீட்டு "தோனி'யை வரவேற்க, கிரிக்கெட் பவுலிங் மிஷன் கண்காட்சியில் காத்திருக்கிறது. துள்ளி விளையாடும் குட்டீஸ்களை, துள்ளி குதிக்கும் மீன்கள் கண்காட்சி "குஷி'ப்படுத்தும். "பப்பி'களின் படையெடுப்பை, பார்த்தாலே பரவசம். பார்வைக்கு மட்டுமின்றி, நாவிற்கும் நல்ல விருந்து காத்திருக்கிறது. நடைபோடும் போதே, நீங்கள் அசைபோட வசதியாக, நொறுநொறு "ஸ்நாக்ஸ்'கள், குளுமைக்கு குளுமை சேர்க்கும் ஐஸ் கிரீம்கள், வெளிநாட்டு சாக்லைட் வகைகள் என, நல்ல அம்சங்கள் பல உள்ளன. ஸ்டால்களை வலம் வந்த பின், நிச்சயம் மனது நிறைந்திருக்கும்; வயிறு நிறைய வேண்டாமா? அதற்கும் அடுக்கடுக்காய் இருக்கிறது, உணவு வகைகள். டோமினோ பீசா, திண்டுக்கல் வேணு பிரியாணி, கிராமிய உணவுகள், வெளிமாநில சிறப்பு உணவுகள் என, நீங்கள் அமர்ந்து உண்ண வசதியாக, அருமையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அப்பாக்களுக்கு அருமையாக, அம்மாக்களுக்கு ஆதரவாக, குழந்தைகளுக்கு குறிப்பிடும்படியாக, தாத்தாக்களுக்கு தரக்கூடியவையாக, பாட்டிகளுக்கு பரிசளிக்க வேண்டியவையாக, இன்னும் எத்தனை உறவுகள் இருக்கோ... அத்தனைக்கும் வேண்டியவை எல்லாம், "தினமலர்' வீட்டு உபயோகக் பொருட்கள் கண்காட்சியில் கிடைக்கும். இன்று ஒரு நாள் மட்டும் பொறுங்கள்; நாளை முதல், அடுத்த ஐந்து நாட்களுக்கு, நீங்களே தடுத்தாலும், உங்கள் தேடலை தடுக்க முடியாது. நாளை முதல் காலை 10.30 மணிக்கு துவங்கி, இரவு 8 மணி வரை, உங்கள் பொழுதுபோக்கிற்கு நாங்கள் பொறுப்பு. ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, கட்டணம் ரூ.30 மட்டுமே. இக்கண்காட்சியை, "தினமலர்' உடன், எல்.ஜி., பெஸ்ட் ஷாப் மற்றும் ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ் இணைந்து வழங்குகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)