தங்கம் விலை ரூ.64 குறைந்ததுதங்கம் விலை ரூ.64 குறைந்தது ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ...
2013ல் ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2013
17:05

வளரும் நாடுகளில் உயர்ந்து வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் அனைவரும் வாங்கும் விலையில் ஸ்மார்ட் போன்களின் வருகை ஆகியவற்றால், நடப்பு 2013 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் விற்பனை 100 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் என்று இதனைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டைக் காட்டிலும் 40% கூடுதலாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.3% கூடுதலாக விற்பனை ஆகும் எனவும் தெரிவித்துள்ளது. பயனாளர்களில் பலருக்கு, ஸ்மார்ட் போன்கள் ஓர் அத்தியாவசியத் தேவையாக மாறி உள்ளது. 2017 ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மொபைல் போன்கள் என்றால், அவை ஸ்மார்ட் போன்களாக மட்டுமே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களாக, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்கும். 2013ல் இதுவரை விற்பனையான ஸ்மார்ட் போன்களில், 75.3% போன்களில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் சென்றுள்ளன. இவற்றில் முதல் இடம் பிடித்துள்ள நிறுவனம் சாம்சங். இதே காலத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ்., 16.9% இடத்தைப் பிடித்துள்ளன. விண்டோஸ் 3.9%, பிளாக்பெரி 2.7% பங்கினைக் கொண்டுள்ளன. மைக்ரோசாப்ட், நோக்கியாவின் சாதனங்கள் பிரிவினை முழுமை யாக காப்புரிமை உட்பட வாங்கியுள்ளதால், அடுத்த ஆண்டில், இந்நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல, ஆப்பிள் நிறுவனம், சீனாவினைத் திடீரென அன்போடு பார்க்கத் தொடங்கியுள்ளதால், அதன் பங்கும் அடுத்த ஆண்டு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)