சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 7 சதவீதம் சரிவடைந்தது சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 7 சதவீதம் சரிவடைந்தது ... விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்5 வெளிவருகிறது விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்5 வெளிவருகிறது ...
சோனியின் அடுத்த அதிரடி : 20 எம்.பி. திறன் கேமராவுடன் மொபைல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2014
14:27

சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா இஸட்1 மொபைல் போனை, 20.7 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், ஏற்கனவே வெளியான Z1 போனைப் போன்றே வடிவமைக்கப்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் Triluminos என்ற டிஸ்பிளேயுடன் இயங்கும். 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 800 ப்ராசசர் இணைக்கப்படும். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன். ஒரே அலுமினிய வார்ப்பில் இதன் வெளிப்பாகம் அமைக்கப்படும். இதன் கேமரா Exmos RS sensor என்ற சென்சார் கொண்டு, 20.7 எம்.பி. திறன் கொண்டதாக இருக்கும். இன்னொரு கேமரா முன்புறமாக 2.2 எம்.பி. திறன் கொண்டிருக்கும். போனின் தடிமன் 9.4 மிமீ; எடை 140 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், 2 ஜிபி ராம் மெமரி, 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் 16 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,300 mAh திறன் கொண்டதாக இருக்கிறது. இது முந்தைய போனில் இருந்த 3,000 mAh திறன் கொண்டது இல்லை என்பது சற்று வியப்பினைத் தருகிறது. இந்த போன் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)