பாசி பருப்பு வரத்து அதி­க­ரிப்பு குவிண்­டா­லுக்கு ரூ.600 விலை சரிவுபாசி பருப்பு வரத்து அதி­க­ரிப்பு குவிண்­டா­லுக்கு ரூ.600 விலை சரிவு ... புது வத்­த­ல்: குவிண்டால் ரூ.10,500 புது வத்­த­ல்: குவிண்டால் ரூ.10,500 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தேசிய அளவில் முட்டை விலை தொடர் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2014
00:21

நாமக்கல்:குளிர்­கால சீசன் முடிந்து விட்­டதால், தேசிய அளவில், முட்டை கொள்­முதல் விலை, தொடர்ந்து, சரிவை நோக்கிச் செல்­கி­றது. இதனால், பண்­ணை­யா­ளர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.தேசிய அளவில், ஆந்­திரா, 30 சத­வீதம், தமி­ழகம், 20 சத­வீதம், மகா­ராஷ்­டிரா, அரி­யானா, பஞ்சாப், மேற்­கு ­வங்கம் ஆகி­யவை, 10 சத­வீதம், கர்­நா­டகா, கேரளா, ஒடிசா ஆகிய மாநி­லங்­களில், 5 சத­வீத அளவுக்கு, முட்டை உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது.தின­சரி நுகர்வு, ஏற்­று­மதி வாய்ப்பு, மூலப்­பொ­ருட்கள் விலை உள்­ளிட்­டவை அடிப்­ப­டை­யாக கொண்டு, சம்­பந்­தப்­பட்ட தேசிய முட்டை ஒருங்­கிணைப்பு கமிட்டி மூலம், முட்டை கொள்­முதல் விலை நிர்­ணயம் செய்­யப்­ப­டு­கி­றது.
கடந்த, 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி, நடப்­பாண்டு, பிப்­ர­வரி மாதம் வரை, நாடு முழு­வதும், குளிர்­கால சீசன்.அதனால், முட்­டையின் தேவை அதி­க­ரித்து, விலையும் அதி­க­ரிக்கும். முட்டை உற்பத்­தி­யா­ளர்கள், பெரும்­பாலும், குளிர்­கால விற்ப­னையை அடிப்­ப­டை­யாக கொண்டே, பண்ணை­களில், கோழி வளர்ப்பில் ஈடு­ப­டுவர்.வட­கி­ழக்கு பரு­வ­மழை சீசன், குளிர்­கால சீதோஷ்ண நிலை, ஜன­வரி மாத ஆங்­கில புத்­தாண்டு, டிசம்பர் மாத கிறிஸ்­துமஸ், உள்ளூர் பண்­டிகை ஆகிய கார­ணங்­களால் முட்டை தேவை அதி­க­ரித்து, அதி­க­பட்ச விலை­யாக, 425 காசு வரை உயர்ந்­தது. ஆனால், தற்­போது, குளிர்­கால மற்றும் பனி பெய்தல் குறைந்­துள்­ளதால், முட்டை நுகர்வு, படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கி­றது.நாமக்கல் முட்டை மண்­டல விலை நிர்­ண­யத்தில் மட்டும், 10 காசு அள­வுக்கு திடீ­ரென சரிந்து, 310 காசாக நிர்­ணயம் செய்­யப்­பட்­டது. 13 நாட்­களில், அதி­க­பட்­ச­மாக, 70 காசு­க­ளுக்கு மேல் குறைந்­துள்­ளது.‘வரும் நாட்­களில், தேசிய அளவில் முட்­டையின் தேவை குறையும் என்­பதால், விலை மேலும் குறைய வாய்ப்­புள்­ளது’ என, பண்­ணை­யா­ளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)