பதிவு செய்த நாள்
22 ஏப்2014
15:09
புதுடில்லி: சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், காட்பரி இந்தியா நிறுவனத்தின் பெயர், மான்டலெஸ் இந்தியா புட்ஸ் என, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மான்டலெஸ் இந்தியா புட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மானு ஆனந்த் கூறியதாவது: சர்வதேச அளவில், மான்டலெஸ் குழுமத்தை சேர்ந்த துணை நிறுவனங்களின் பெயர்களை, மான்டலெஸ் என்று மாற்றும் பணியில், இறுதியாக, காட்பரி இந்தியா நிறுவனத்தின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்நிறுவனத்தின் காட்பரி டெய்ரி மில்க், ஸ்டார், ஜெம்ஸ், பெர்க், போர்ன்விட்டா, ஓரியோ, டாங்க், போன்வில்லி, ஹால்ஸ் உள்ளிட்டவற்றின் பெயர்கள், 'பேக்கேஜிங்' போன்ற வற்றில், எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், அத்தயாரிப்புகளின் அட்டையில், மான்டலெஸ் இந்தியா புட்ஸ் என, அச்சிடப்பட்டிருக்கும். இவ்வாறு ஆனந்த் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|