பதிவு செய்த நாள்
23 ஏப்2014
10:21
மும்பை : கடந்த சில நாட்களாகவே இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. இன்றும்(ஏப்ரல் 23ம் தேதி) சரிவுடன் ஆரம்பித்த இந்திய ரூபாயின் மதிப்பு, மீண்டும் ரூ.61-ஐ தொட்டுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ.61.06-ஆக இருந்தது. தொடர்ந்து சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு வர்த்தகநேர இறுதியில் 31 காசுகள் சரிந்து ரூ.61.07-ஆக முடிந்தது. இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வந்தாலும், அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்து இருப்பதால் ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.60.76-ஆக இருந்தது. கடந்த ஒரு மாத காலமாகவே ரூபாயின் மதிப்பு ரூ.60-லேயே நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|