இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன் 189 கோடி டாலர்இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன் 189 கோடி டாலர் ... இருசக்கர வாகனங்களுக்கு காப்பீடு அவசியம் ஏன்...? இருசக்கர வாகனங்களுக்கு காப்பீடு அவசியம் ஏன்...? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ரூ.1.02 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
23:48

புதுடில்லி: நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,–ஜூன்), 24.15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.02 லட்சம் கோடி ரூபாயாக (1,694 கோடி டாலர்) உயர்ந்துள்ளது.
விண்கலம்:மோட்டார் வாகனம், விமானம் மற்றும் விண்கல உதிரிபாகங்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டதையடுத்து, ஒட்டு மொத்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது என, இந்திய பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், விமானம் மற்றும் விண்கல பாகங்கள் ஏற்றுமதி, 9 ஆயிரம் கோடி ரூபாயாக (150 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய காலாண்டில், 3,444 கோடி ரூபாயாக (57.40 கோடி டாலர்) இருந்தது.இதையடுத்து, கலப்பு உலோக துறை மற்றும் உலோக சாதனங்கள் ஏற்றுமதி, 36.12 சதவீதம் உயர்ந்து, 8,880 கோடி ரூபாயாக (148 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு காலாண்டில், கார்கள், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி, 24.52 சதவீதம் அதிகரித்து, 18 ஆயிரம் கோடி ரூபாயாக (300 கோடி டாலர்) உயர்ந்துள்ளது.
நவீன தொழிற்நுட்பம்:பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என்பது, போட்டி மிகுந்த இத்துறையில், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உயர் மதிப்பு கொண்ட இந்திய பொறியியல் பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என, இ.இ.பி.சி.,யின் தலைவர் அனுபம் ஷா தெரிவித்தார்.
ஒட்டு மொத்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்களிப்பு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இக்கூட்டமைப்பு நாடுகளுக்கான, இந்திய பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, கணக்கீட்டு காலாண்டில், 16.59 சதவீதம் வளர்ச்சி கண்டு, 285 கோடி டாலராக அதிகரித்துஉள்ளது.
இதே போன்று, மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா நாடுகளுக்கான பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, முறையே, 72 சதவீதம் மற்றும் 73 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)