இருசக்கர வாகனங்களுக்கு காப்பீடு அவசியம் ஏன்...?இருசக்கர வாகனங்களுக்கு காப்பீடு அவசியம் ஏன்...? ... உள்­நாட்டு வாகன விற்­பனை சூடு­பி­டித்­தது உள்­நாட்டு வாகன விற்­பனை சூடு­பி­டித்­தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஹோண்டா’ நிறுவனத்தின் ‘மோபிலியோ’ கார் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2014
10:40

ஜப்பானைச் சேர்ந்த, ‘ஹோண்டா’ நிறுவனத்தின், துணை நிறுவனம் தான், ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (எச்.சி.ஐ.எல்.,). இந்த நிறுவனத்திற்கு, ராஜஸ்தான் மாநிலம், பிவாடி மற்றும் உ.பி., மாநிலத்தில், கிரேட்டர் நொய்டா நகரில், பிரமாண்டமான கார் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்தியாவில், ஹோண்டா சிட்டி, ஜாஸ், பிரியோ, சிஆர் – வி, அமேஸ் ஆகிய மாடல் கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது, மல்டி பர்ப்பஸ் வெகிக்கிள்(எம்.பி.வி.,) பிரிவில், ‘மோபிலியோ’ காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், ‘எஸ்’ – ‘இ’ – ‘வி’ என, மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும் இந்த கார் அறிமுகமாகி உள்ளது.
‘மோபிலியோ’ கார், ஒரே நேரத்தில், ஏழு பேர் பயணிக்கும் வகையில், இருக்கை வசதிகள் கொண்டது. இந்த இருக்கைகள், ‘அட்ஜெஸ்ட்’ செய்யும் வசதி கொண்டது. கடைசி இருக்கை பகுதியில் கூட, கால் நீட்டி அமரும் வகையில் தாராள இட வசதி கொண்டது. நீண்ட துார பயணத்திற்கு, ஏற்ற வகையில், இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள, மாருதி சுசூகியின் – ‘எர்டிகா,’ மகிந்திராவின் – ‘சைலோ,’ நிசானின் – ‘எவாலியா,’ டொயோட்டாவின் – ‘இன்னோவா’ மாடல் கார்களை நினைவுப்படுத்தும் வகையில், ஹோண்டாவின், ‘மோபிலியோ’ கார் உள்ளது.
‘மோபிலியோ’ பெட்ரோல் கார், 1.5 லிட்டர் ஐ–விடிஇசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி, 119ps@6,600rpm. இதன், ‘டார்க்’ 145Nm.
டீசல் காரில், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி, 1--00ps@3,600rpm. இதன், ‘டார்க்’ 200Nm@1750rpm.
இரண்டு வகை கார்களிலும், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இதுதவிர, அட்டகாசமான, முன்புற மற்றும் பின்புற பம்பர்கள், எல்.இ.டி., வசதியுடன் கூடிய முகப்பு விளக்குகள், அலாய் வீல்கள், ‘டெய்ல்கேட் ஸ்பாய்லர்’ ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)