‘ஹோண்டா’ நிறுவனத்தின் ‘மோபிலியோ’ கார் அறிமுகம்‘ஹோண்டா’ நிறுவனத்தின் ‘மோபிலியோ’ கார் அறிமுகம் ... மழைக்கால கார் பராமரிப்பு - மாருதி சுசூகி விசேஷ ஏற்பாடு! மழைக்கால கார் பராமரிப்பு - மாருதி சுசூகி விசேஷ ஏற்பாடு! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உள்­நாட்டு வாகன விற்­பனை சூடு­பி­டித்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2014
00:21

புது­டில்லி:நீண்ட கால மந்த நிலைக்கு பிறகு, சென்ற ஜூலை மாதத்தில், முன்­னணி நிறு­வ­னங்­களின் வாகன விற்­பனை சூடு­பி­டித்­துள்­ளது. இது, சோம்­பிக்­கி­டந்த மோட்டார் வாகன துறைக்கு புத்­து­ணர்வு அளிக்கும் வித­மாக அமைந்­துள்­ளது.
தள்ளுபடி: இது­கு­றித்து, ஹூண்டாய் மோட்டார் இந்­தியா நிறு­வ­னத்தின், மூத்த துணைத் தலைவர் (விற்­பனை மற்றும் சந்­தைப்­ப­டுத்தல்) ராகேஷ் ஸ்ரீவத்­சவா கூறு­கையில், ‘சந்­தையில் பல்­வேறு புதிய வாக­னங்­களின் அணி­வ­குப்பு மற்றும் நிறு­வ­னங்கள் அதி­க­ளவில் சிறப்பு தள்­ளு­படி சலு­கை­களை வழங்­கி­யதன் கார­ண­மாக, வாக­னங்­க­ளுக்­கான தேவை சூடு­பி­டிக்க துவங்­கி­யுள்­ளது’ என்று தெரி­வித்தார்.
தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில் முன்­ன­ணியில் உள்ள மாருதி சுசூகி நிறு­வ­னத்தின் கார் விற்­பனை, மதிப்­பீட்டு மாதத்தில், 21.7 சத­வீதம் அதி­க­ரித்து, 1,01,380 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்­தாண்டின் இதே மாதத்தில், 83,299 ஆக இருந்­தது.குறிப்­பாக, உள்­நாட்டில், இந்­நி­று­வ­னத்தின் கார் விற்­பனை, 19.9 சத­வீதம் உயர்ந்து, 75,145லிருந்து, 90,093 ஆக வளர்ச்சி கண்­டுள்­ளது.ஹூண்டாய்:கணக்­கீட்டு மாதத்தில், ஹூண்டாய் நிறு­வ­னத்தின் உள்­நாட்டு கார்கள் விற்­ப­னையும், 12.69 சத­வீதம் உயர்ந்து, 25,965லிருந்து, 29,260 ஆக அதி­க­ரித்­துள்­ளது.ஹோண்டா நிறு­வ­னத்தின் உள்­நாட்டு கார்கள் விற்­பனை, 39.97 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 11,223லிருந்து, 15,709 ஆக உயர்ந்­துள்­ளது.
இதே போன்று, டொயோட்டா கிர்­லோஸ்கர் மோட்டார் நிறு­வ­னத்தின் உள்­நாட்டு கார் விற்­பனை, 3.52 சத­வீதம் அதி­க­ரித்து, 11,515 என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 11,921 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
இரு­சக்­கர வாகனம்:ஹீரோ மோட்­டோகார்ப் நிறு­வ­னத்தின் ஒட்டு மொத்த இரு­சக்­கர வாகன விற்­பனை, மதிப்­பீட்டு மாதத்தில், 8.67 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 4,87,545லிருந்து, 5,29,862 ஆக உயர்ந்­துள்­ளது.யமஹா மோட்டார் இந்­தி­யாவின் உள்­நாட்டு இரு­சக்­கர வாகன விற்­ப­னையும், 35.81 சத­வீதம் அதி­க­ரித்து, 37,026 என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 50,286 ஆக வளர்ச்சி கண்­டுள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)