பஞ்சாப் நேஷனல் பேங்க்ஆன் லைனில் ‘வாட் வரிபஞ்சாப் நேஷனல் பேங்க்ஆன் லைனில் ‘வாட் வரி ... ‘58வது ஆண்டில் எல்.ஐ.சி.,’ ‘58வது ஆண்டில் எல்.ஐ.சி.,’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நாட்டின் நிதி பற்­றாக்­குறை ரூ.3.28 லட்சம் கோடியை எட்­டி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2014
02:45

புது­டில்லி:நடப்பு நிதி­யாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரை­யி­லான காலத்தில், நாட்டின் நிதி பற்­றாக்­குறை, 3.28 லட்சம் கோடி ரூபாயை எட்­டி­யுள்­ளது. இது, முழு நிதி­யாண்­டிற்­கான பட்ஜெட் மதிப்­பீட்டில், 61.2 சத­வீ­த­மாகும்.
கடந்த நிதி­யாண்டின் இதே காலத்தில், நிதி பற்­றாக்­குறை, பட்ஜெட் மதிப்­பீட்டில், 62.8 சத­வீ­த­மாக இருந்­தது. மதிப்­பீட்டு காலத்தில், மத்­திய அரசின் செல­வினம், 5.03 லட்சம் கோடி ரூபா­யாக உள்­ளது. இது, முழு நிதி­யாண்­டிற்­கான மதிப்­பீட்டில், 28.1 சத­வீ­த­மாகும்.மேற்­கண்ட மொத்த செல­வி­னத்தில், திட்­ட­மிட்ட செல­வினம், 1.32 லட்சம் கோடி­யா­கவும், திட்­ட­மி­டப்­படா செல­வினம், 3.71 லட்சம் கோடி ரூபா­யா­கவும் உள்­ளன.
இதே காலத்தில், வருவாய் வசூல், 1.75 லட்சம் கோடி ரூபா­யாக உள்­ளது. இது, பட்ஜெட் மதிப்­பீட்டில், 14.8 சத­வீ­த­மாகும்.கணக்­கீட்டு காலத்தில், வருவாய் பற்­றாக்­குறை, 2.66 லட்சம் கோடி ரூபா­யாக உள்­ளது. இது, பட்ஜெட் மதிப்­பீட்டில், 70.4 சத­வீ­த­மாகும்.கடந்த 2013 – 14ம் நிதி­யாண்டில், நாட்டின் நிதி பற்­றாக்­குறை, 5.08 லட்சம் கோடி ரூபாய் அல்­லது மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் (ஜி.டீ.பி.,), 4.5 சத­வீதம் என்­ற­ளவில் இருந்­தது. இது, இதற்கு முந்­தைய நிதி­யாண்டில், 4.9 சத­வீ­த­மாக அதி­க­ரித்து காணப்­பட்­டது.
நடப்பு நிதி­யாண்டில், நிதி பற்­றாக்­குறை, 5.31 லட்சம் கோடி ரூபா­யாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது, ஜி.டீ.பி.,யில், 4.1 சத­வீ­த­மாகும்.இதை, வரும் 2016 – 17ம் நிதி­யாண்­டிற்குள், 3 சத­வீ­த­மாக குறைக்க, மத்திய அரசு, இலக்கு நிர்­ண­யித்துள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)