முதன்முறையாக நிப்டி 8 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது - சென்செக்ஸூம் புதிய உச்சம்முதன்முறையாக நிப்டி 8 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது - சென்செக்ஸூம் புதிய ... ... பங்குசந்தைகளில் ஏற்றம் தொடர்கிறது! பங்குசந்தைகளில் ஏற்றம் தொடர்கிறது! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரத்தால் ‘நிப்டி 8,000 புள்ளிகளை கடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2014
00:38

மும்பை: கடந்த இரண்டரை ஆண்டுகளில் காணப்படாத வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால், நேற்று, பங்கு சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.86 சதவீதம் மற்றும் 0.92 சதவீதம் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டன.
நேற்றைய வியாபாரத்தில், உலோகம், பொறியியல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்பொருட்கள் துறை குறியீட்டு எண் மட்டும், 0.67 சதவீதம் சரிவவை கண்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 229.44 புள்ளிகள் அதிகரித்து, 26,867.55 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி, டாட்டாபவர் உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஐ.டி.சி., சன்பார்மா உள்ளிட்ட, எட்டு நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 73.35 புள்ளிகள் உயர்ந்து, 8,027.70 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)