ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.128 குறைவுஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.128 குறைவு ... ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.60.49 ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.60.49 ...
வர்த்­தக இழப்பில் தவிக்கும் நுாற்­பா­லைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2014
00:18

திருப்பூர்:தமி­ழக நுாற்­பா­லைகள், நுாலிழை விலையை கிலோ­வுக்கு, 7 ரூபாய் குறைத்து உள்­ளன.தமி­ழ­கத்தில் திண்­டுக்கல், மதுரை, ஈரோடு, திருப்பூர், கோவை பகு­தி­களில் அதி­க­ளவில் நுாற்­பா­லைகள் இயங்கி வரு­கின்­றன.
வெளிமாநிலங்கள்:இந்­நுாற்­பா­லைகள், வெளி­மா­நி­லங்­க­ளி­லி­ருந்து பருத்­தியை கொள் ­முதல் செய்து, நுாலி­ழை­களை உற்­பத்தி செய்­கின்­றன.நடப்பு பருத்தி பருவம் துவக்கம் முதற்­கொண்டே, தமி­ழக நுாற்­பா­லை­க­ளுக்கு, வெளி­மா­நி­லங்­களில் இருந்து தர­மான பருத்தி கிடைக்­க­வில்லை.தர­மற்ற பருத்­தியை, அதிக விலை கொடுத்து, கொள்­முதல் செய்­வதால், நுாற்­பா­லை­களின் உற்­பத்தி செல­வினம் பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது.
வரும் பரு­வத்தில், இந்­தியா, அமெ­ரிக்கா உட்­பட அனைத்து நாடு­க­ளிலும், பருத்தி உற்­பத்தி அதி­க­ரிக்கும் எனவும், இதை­ய­டுத்து அதன் விலை சரிவை காணும் எனவும், மதிப்­பி­டப் பட்டுள்­ளது.இதை கருத்தில் கொண்ட, சர்­வ­தேச வர்த்­த­கர்கள், உள்ளூர் ஜவுளிஉற்­பத்­தி­யா­ளர்கள் மற்றும் வியா­பா­ரிகள் மனதில் பருத்தி விலை குறையும் என்ற எண்ணம் மேலோங்கி உள்­ளது.
இதனால் வர்த்­த­கர்கள், நுாலிழை மற்றும் துணி கொள்­மு­தலை வெகு­வாக குறைத்து கொண்­டுள்­ளனர். வர்த்­தக பாதிப்பு அதி­க­ரிப்பால், நுாலிழை தேக்­க­ம­டைந்து, வருவாய் இழப்பு ஏற்­ப­டு­கி­றது.தற்­போது, ஒரு கேண்டி பருத்தி, 43,600 ரூபா­யாக உயர்ந்தே காணப்­ப­டு­கி­றது.
நெருக்கடி:வர்த்­தக பாதிப்­பு­களால், ஏற்­படும் வருவாய் இழப்பு கார­ண­மாக, நுாற்­பா­லைகள் நுால் விலையை குறைத்து வரு­கின்­றன.ஆக., 1ல், கிலோ­வுக்கு 10 ரூபாய் குறைந்த நுாலிழை விலை, மீண்டும் கிலோ­வுக்கு, 7 ரூபாய் குறைந்­துள்­ளது.இது­கு­றித்து, கோவை ‘டெக்ஸ்பி­ரனர்ஸ்’ அமைப்பு இயக்­குனர், இளங்கோ கூறி­ய­தா­வது:
பருத்தி விலை உயர்வு, உற்­பத்தி செல­வினம் அதி­க­ரிப்பு போன்­ற­வற்றால், தமி­ழக நுாற்பா­லைகள் தொடர்ந்து நெருக்­க­டியை சந்­தித்து வரு­கின்­றன.விலை குறையும் என்ற எதிர்­பார்ப்பில், ஜவுளி உற்­பத்­தி­யா­ளர்கள் நுாலிழை கொள்­மு­தலை குறைத்து உள்­ளனர். இதனால், நுாற்­பா­லை­க­ளுக்கு வர்த்­தக இழப்பு ஏற்­பட்டு வரு­கி­றது. இச்­சூ­ழலை சமா­ளிக்க, நுாலிழை விலை கிலோ­வுக்கு, மேலும், 7 ரூபாய் குறைக்­கப்­பட்டு உள்­ளது.
மதிப்பீடு:வரும் ஆண்டில், வர­லாறு காணாத அளவில் பருத்தி உற்­பத்தி அதி­க­ரிக்கும் என்று மதிப்­பிடப்பட்டுள்ளது. மேலும், அதிக இருப்பு உள்­ள­தால், சீனா, இந்­திய பருத்­தியை அதிகம் கொள்­முதல் செய்­யாது என்ற கருத்தும் நிலவுகிறது.எனினும், தற்­போது, நுாலிழை ஏற்­று­ம­திக்­கான விசா­ர­ணைகள் வரத்­து­வங்­கி­யுள்­ளன.பருத்தி விலை குறையும்; நிலைமை சீராகும் என்ற நம்­பிக்­கை­யுடன், நுாற்­பா­லைகள் காத்­தி­ருக்­கின்­றன.இவ்­வாறு, இளங்கோ கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)