பதிவு செய்த நாள்
21 செப்2014
01:57
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 384 ரூபாய் சரிவடைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,518 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,144 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 26,930 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஏழு ரூபாய் குறைந்து, 2,511 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 56 ரூபாய் சரிவடைந்து, 20,088 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 70 ரூபாய் குறைந்து, 26,860 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 42.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 39,035 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த திங்களன்று (15ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,559 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,472 ரூபாய்க்கும் விற்பனையானது. இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 48 ரூபாயும், சவரனுக்கு, 384 ரூபாயும் சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|