மணம் குறை­யாத மல்­லிகைவிலை ரூ.200ஆக வீழ்ச்சிமணம் குறை­யாத மல்­லிகைவிலை ரூ.200ஆக வீழ்ச்சி ... டயர் துறை 8 சதவீதம் வளர்ச்சி காணும் டயர் துறை 8 சதவீதம் வளர்ச்சி காணும் ...
நவ­ரத்­தின ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி ரூ.85,656 கோடி­யாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2014
02:10

மும்பை:நடப்பு நிதி­யாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை­யி­லான ஐந்து மாத காலத்தில், நாட்டின் நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, நிகர அளவில், 3.62 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 85,656 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது என, நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு கவுன்­சிலின் (ஜி.ஜே.இ.பி.சி.,) தற்­கா­லிக புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
டாலர் மதிப்பு:கடந்த நிதி­யாண்டின் இதே காலத்தில், இவற்றின் ஏற்­று­மதி, 82,666 கோடி ரூபா­யாக இருந்­தது.அதே­ச­மயம், டாலர் மதிப்பின் அடிப்­ப­டையில், நவ­ரத்­தி­னங்கள் மற்­றும்­ ஆ­ப­ர­ணங்கள் ஏற்­று­மதி, கணக்­கீட்டு காலத்தில், 0.25 சத­வீதம் மட்­டுமே வளர்ச்சி கண்டு, 1,422 கோடி டால­ரி­லி­ருந்து, 1,426 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.
மதிப்­பீட்டு ஐந்து மாத காலத்தில், நறுக்­கப்­பட்ட மற்றும் பட்டை தீட்­டப்­பட்ட வைரங்கள் ஏற்­று­மதி, 9.97 சத­வீதம் சரி­வ­டைந்து, 62,871 கோடி­யி­லி­ருந்து, 56,603 கோடி ரூபா­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது. மேலும், இவற்றின் ஏற்­று­மதி அளவின் அடிப்­ப­டை­யிலும், 161 லட்சம் காரட்­டி­லி­ருந்து, 145 லட்சம் காரட்­டாக குறைந்­துள்­ளது.
அதே­ச­மயம், தங்க ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, 21.36 சத­வீதம் அதி­க­ரித்து, 17,488 கோடி­யி­லி­ருந்து, 21,223 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.நாணயங்கள்:இருப்­பினும், கணக்­கீட்டு காலத்தில், தங்க பதக்­கங்கள் மற்றும் நாண­யங்கள் ஏற்­று­மதி, 0.17 சத­வீதம் குறைந்து, 6,070 கோடி­யி­லி­ருந்து, 6,060 கோடி ரூபா­யாக சற்று சரிவை சந்­தித்­துள்­ளது.
இதே போன்று, நவ­ரத்­தி­னங்கள் ஏற்­று­ம­தியும், 42.48 சத­வீதம் வீழ்ச்சி கண்டு, 1,632 கோடி­யி­லி­ருந்து, 938 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.மதிப்­பீட்டு காலத்தில், வெள்ளி ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, 26.62 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 3,758 கோடி­யி­லி­ருந்து, 4,759 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
மேற்­கண்­டவை தவிர, முத்­துகள் மற்றும் செயற்கை கற்கள் ஏற்­று­மதி முறையே, 4 கோடி மற்றும் 151 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளன.கச்சா வைரம்:அதே­ச­மயம், கணக்­கீட்டு காலத்தில், கச்சா வைரங்கள் ஏற்­று­மதி, 7.07 சத­வீதம் பின்­ன­டைவை கண்டு, 3,979 கோடி­யி­லி­ருந்து, 3,698 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.
மேலும், அளவின் அடிப்­ப­டை­யி­லான இவற்றின் ஏற்­று­ம­தியும், 38.22 சத­வீதம் குறைந்து, 220 லட்சம் காரட்­டி­லி­ருந்து, 136 லட்சம் காரட்­டாக வீழ்ச்சி கண்­டுள்­ளது என, ஜி.ஜே.இ.பி.சி., புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)