பதிவு செய்த நாள்
23 செப்2014
00:56
புதுடில்லி: வரும் 2026ம் ஆண்டிற்குள், இந்திய மோட்டார் வாகன துறை வருவாய், 5 மடங்கு அதிகரித்து, 18 லட்சம் கோடி ரூபாயை (30 ஆயிரம் கோடி டாலர்) எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதே போன்று, வாகனங்கள் விற்பனையும், மூன்று மடங்கு வளர்ச்சி கண்டு, 7.60 கோடியாக உயரும் என, இக்ரா மேலாண்மை ஆலோசனை சேவைகள் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தக வாகனங்கள்:இதன்படி, சென்ற நிதியாண்டில், 31 லட்சமாக இருந்த பயணிகள் வாகன விற்பனை, வரும் 2026ம் ஆண்டிற்குள், 1.34 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர, வர்த்தக வாகனங்கள் விற்பனை, 7 லட்சத்திலிருந்து, 39 லட்சமாகவும், இருசக்கர வாகன விற்பனை, 1.69 கோடியிலிருந்து, 5.55 கோடியாகவும், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 8 லட்சத்திலிருந்து, 30 லட்சமாகவும் வளர்ச்சி காணும் என, ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.சென்ற நிதியாண்டில், விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, 2.15 கோடியாக இருந்தது. இது, வரும் 2026ம் ஆண்டிற்குள், 7.58 கோடியாக உயரும் என, கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், அவ்வாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மோட்டார் வாகன துறை பங்களிப்பு, 13 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காண்பதுடன், இத்துறை, 8 ஆயிரம் கோடி டாலர் முதலீட்டை ஈர்க்கும் எனவும், அப்போது, இத்துறையில், கூடுதலாக, 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும், மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருவாய்:இவை தவிர, 800 கோடி டாலராக உள்ள மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதி வருவாய், 4,000 கோடி டாலராகவும், 1,000 கோடி டாலராக உள்ள உதிரி பாகங்கள் ஏற்றுமதி, 7,400 கோடி டாலராகவும் வளர்ச்சி காணும் என, ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|