மாருதி சுசூகி 69,555 கார்­களைதிரும்ப பெறு­கி­றதுமாருதி சுசூகி 69,555 கார்­களைதிரும்ப பெறு­கி­றது ... ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன கார் ஏற்றுமதி துவக்கம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன கார் ஏற்றுமதி துவக்கம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை விறுவிறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2014
23:46

புதுடில்லி:பண்டிகை காலத்தை முன்னிட்டு, முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை, சென்ற செப்டம்பரில் விறுவிறுப்படைந்துள்ளது.
இதுகுறித்து, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘‘வாடிக்கையாளர் களிடையே, புதிய மாடல் கார்களுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, முதன் முதலில் கார் வாங்குவோரின் எண்ணிக்கையும் விறுவிறுப்படைந்துள்ளது,’’ என்று தெரிவித்தார்.
மாருதி சுசூகி: நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், சென்ற செப்டம்பர் மாதத்தில், 1,09,742 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இது, கடந்தாண்டில் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையுடன் (1,04,964) ஒப்பிடுகையில், 4.6 சதவீதம் அதிகமாகும்.
குறிப்பாக, உள்நாட்டில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 9.8 சதவீதம் அதிகரித்து, 90,339லிருந்து, 99,290 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 28.2 சதவீதம் குறைந்து, 14,565 என்ற எண்ணிக்கையிலிருந்து, 10,452ஆக சரிவடைந்துள்ளது.ஹூண்டாய்: மதிப்பீட்டு மாதத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின், கார்கள் விற்பனையும், 51,417லிருந்து, 51,471ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 14.5 சதவீதம் உயர்ந்து, 30,601 என்ற எண்ணிக்கையிலிருந்து, 35,041ஆக அதிகரித்துள்ளது.அதேசமயம், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 21.1 சதவீதம் சரிவடைந்து, 20,816லிருந்து, 16,430ஆக குறைந்துள்ளது.
ஹோண்டா: இந்நிறுவனத்தின் கார் விற்பனை, சென்ற செப்டம்பரில், 45 சதவீதம் அதிகரித்து, 10,354 என்ற எண்ணிக்கையிலிருந்து, 15,015ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
மகிந்திரா: இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 3.7 சதவீதம் உயர்ந்து, 43,289 என்ற எண்ணிக்கையிலிருந்து, 44,911ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 7.8 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2,715லிருந்து, 2,503ஆக குறைந்துள்ளது.
எச்.எம்.எஸ்.ஐ.,: ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், இருசக்கர வாகன விற்பனை, சென்ற செப்டம்பரில், 33.32 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,28,907 லிருந்து, 4,38,521ஆக அதிகரித்துள்ளது.
யமஹா: இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை, உள்நாட்டில், 26.78 சதவீதம் அதிகரித்து, 46,790லிருந்து, 59,325ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)