வியா­பா­ரிகள் வரா­ததால் கொப்­பரை மூட்டை வரத்து சரிவுவியா­பா­ரிகள் வரா­ததால் கொப்­பரை மூட்டை வரத்து சரிவு ... பெல்லாரி வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிப்பு பெல்லாரி வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ரோஜா விலை வீழ்ச்சி எதி­ரொலி: ஒரே மாதத்தில் விவ­சா­யி­க­ளுக்கு ரூ.5 கோடி நஷ்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2014
00:18

ஓசூர்:ரோஜா விலை வீழ்ச்­சியால், ஒரே மாதத்தில், 5 கோடி ரூபாய் அள­வுக்கு நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக, ஓசூர் விவ­சா­யிகள் தெரி­வித்­தனர்.
ஓசூர் பகு­தியில், 4,000 ஏக்­கரில், பசுமை குடில் அமைத்து, ரோஜா சாகு­படி நடக்­கி­றது. இங்கு சாகு­படி செய்­யப்­படும் ரோஜாக்கள், பிரான்ஸ், சிங்­கப்பூர், மலே­சியா, நியூ­சி­லாந்து மற்றும் அரே­பிய நாடு­க­ளுக்கும் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.கடந்த செப்­டம்பர் மாதம் முதல், ரோஜாக்­க­ளுக்கு போதிய விலை கிடைக்­க­வில்லை. ஒரு ரோஜா பூ உற்­பத்தி செய்ய, 3.50 காசுகள் செல­வா­கி­றது. இந்­நி­லையில் ஒன்று, 2.50 ரூபாய் என்ற விலையில், ரோஜாப்பூ விற்­ப­னை­யா­கி­றது. விவ­சா­யிகள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
ஓசூர் சிறு விவ­சா­யிகள் சங்க நிர்­வாகி பால­சி­வப்­பி­ரசாத், பட்டன் ரோஸ் உற்­பத்­தி­யாளர் நந்தி கிருஷ்ணன் ஆகியோர் கூறி­ய­தா­வது:ஓசூர் மற்றும் கேரள மார்க்­கெட்டில், ரோஜாக்கள் விலை வீழ்ச்சி அடைந்­துள்­ளது. செப்­டம்பர் மாதம், 20ம் தேதி முதல் அக்­டோபர், 18ம் தேதி வரை, ஒரு ரூபாய்க்கு விற்­ப­னை­யான ரோஜா விலை,கடந்த நான்கு நாட்­க­ளாக, 2.50 ரூபா­யாக உயர்ந்தது.
ஆனால், உற்­பத்தி செலவு, 3.50 ரூபா­யாக உள்ள நிலையில், விவ­சா­யி­க­ளுக்கு நஷ்டம் ஏற்­பட்டு வரு­கி­றது. இதனால், பல விவ­சா­யிகள், ரோஜா சாகு­படி பரப்பை குறைத்து வரு­கின்­றனர். விலை வீழ்ச்­சியால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 5 கோடி ரூபாய் அள­விற்கு நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது.இவ்­வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)