ஹீரோ மோட்டோ கார்ப்பின் 2 புதிய பைக்குகள் அறிமுகம்!ஹீரோ மோட்டோ கார்ப்பின் 2 புதிய பைக்குகள் அறிமுகம்! ... நிசான் நிறுவனம் 9,000 கார்களைதிரும்ப பெறுகிறது நிசான் நிறுவனம் 9,000 கார்களைதிரும்ப பெறுகிறது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்­தி­யாவின் கச்சா எண்ணெய் பயன்­பாடு 3 சத­வீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2014
00:31

புது­டில்­லி:இந்­தி­யாவின் கச்சா எண்ணெய் பொருட்கள் பயன்­பாடு, சென்ற செப்­டம்பர் மாதத்தில், 3 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது. என்­றாலும், டீசல் விற்­பனை, நடப்பு நிதி­யாண்டில், இரண்­டா­வது முறை­யாக சரிவை கண்­டுள்­ளது.
டீசல் விற்பனை:இதன்­படி, மதிப்­பீட்டு மாதத்தில், உள்­நாட்டில், கச்சா எண்ணெய் பொருட்கள் பயன்­பாடு, 2.9 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1.23 கோடி டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்­தாண்டு செப்­டம்­பரில், 1.19 கோடி டன்­னாக இருந்­தது என, மத்­திய பெட்­ரோ­லிய அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது. கணக்­கீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த டீசல் விற்­பனை, 49.08 லட்சம் டன்­னி­லி­ருந்து, 48.99 லட்சம் டன்­னாக குறைந்­துள்­ளது.
இதற்கு முன், சென்ற ஏப்­ரலில் தான், டீசல் விற்­பனை, 61.52 லட்சம் டன்­னி­லி­ருந்து, 59.29 லட்சம் டன்­னாக குறைந்து காணப்­பட்­டது. ஆக, நடப்பு நிதி­யாண்டில், இரண்­டா­வது முறை­யாக, உள்­நாட்டில் டீசல் விற்­பனை சரிவை கண்­டுள்­ளது.
ஒட்­டு­மொத்த பெட்­ரோ­லிய பொருட்கள் தேவையில், டீசலின் பங்­க­ளிப்பு, 43 சத­வீ­த­மாக உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.கடந்த 2003 – 04ம் நிதி­யாண்டு முதல், டீசல் விற்­பனை வளர்ச்சி, 6 – 8 சத­வீதம் என்ற அளவில் இருந்­தது. சென்ற 2013 – 14ம் நிதி­யாண்டில், முதன் முறை­யாக, இதன் விற்­பனை, 1 சத­வீதம் சரிவை கண்டு, 6.83 கோடி டன்­னாக சரிவை கண்­டது. இதற்கு, மாதந்­தோறும், டீசல் விலை, லிட்­ட­ருக்கு, 50 காசுகள் உயர்த்­தப்­பட்­டதே முக்­கிய காரணம். அதே­ச­மயம், சென்ற செப்­டம்­பரில், பெட்ரோல் விற்­பனை, 21.6 சத­வீதம் உயர்ந்து, 15 லட்சம் டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது.
சமையல் எரிவாயு: இதே போன்று, சமையல் எரி­வாயு விற்­ப­னையும், 15 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 15.50 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது. அதே­ச­மயம், நாப்தா பயன்­பாடு, 9.38 லட்சம் டன்­னி­லி­ருந்து, 8.22 லட்சம் டன்­னாக சரி­வ­டைந்­துள்­ளது.கணக்­கீட்டு மாதத்தில், உள்­நாட்டில், கச்சா எண்ணெய் உற்­பத்தி, 1.1 சத­வீதம் குறைந்து, 30.40 லட்சம் டன்­னாக குறைந்­து உள்­ளது.இதே போன்று, இயற்கை எரி­வாயு உற்­பத்­தியும், 6.2 சத­வீதம் வீழ்ச்சி கண்டு, 271 கோடி கன­மீட்­ட­ராக சரி­வ­டைந்­துள்­ளது.
குறிப்­பாக ஓ.என்.ஜி.சி., நிறு­வ­னத்தின் இயற்கை எரி­வாயு உற்­பத்தி, 7.1 சத­வீதம் குறைந்து, 177 கோடி கன­மீட்­ட­ராக வீழ்ச்சி கண்­டுள்­ளது.உள்­நாட்டில் உள்ள 22 கச்சா எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை­களின் உற்­பத்தி, 2.5 சத­வீதம் குறைந்து, 1.80 கோடி டன்­னாக குறைந்­துள்­ளது என, பெட்­ரோ­லிய அமைச்­சகம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)