பதிவு செய்த நாள்
26 அக்2014
00:29
சென்னை :கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,568 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 27,460 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று, ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால், முந்தைய நாள் விலையிலேயே, ஆபரணங்கள் விற்பனையாகின. ஒரு கிராம் வெள்ளி, 40.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 38,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த திங்களன்று (20ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,583 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,664 ரூபாய்க்கும் விற்பனையானது. இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாயும், சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|