நெல் கொள்­முதல் 99 லட்சம் டன்நெல் கொள்­முதல் 99 லட்சம் டன் ... ரூபாயின் மதிப்பு சரிவு - மீண்டும் ரூ.62-ஐ தொட்டது ரூபாயின் மதிப்பு சரிவு - மீண்டும் ரூ.62-ஐ தொட்டது ...
காபி ஏற்­று­மதி 50 லட்சம் மூட்­டை­க­ளாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2014
00:23

புது­டில்லி: நடப்பு 2014–15ம் சந்தை பரு­வத்தில் (அக்.,–செப்.,), இந்­தி­யாவின் காபி ஏற்­று­மதி, 50.20 லட்சம் மூட்­டை­க­ளாக (ஒரு மூட்டை=60கிலோ) அதி­க­ரிக்கும் என, அமெ­ரிக்க வேளாண் அமைச்­சகம் (யு.எஸ்.டி.ஏ.,) தெரி­வித்­துள்­ளது. இது, முந்­தைய பரு­வத்தில், 48 லட்சம் மூட்­டை­க­ளாக இருந்­தது.
சர்­வ­தேச சந்­தையில், இந்­திய காபியின் விலை இன்னும் அதி­க­ரித்தே காணப்­ப­டு­கி­றது. அதே­ச­மயம், இதற்­கான தேவையும் மந்­த­மா­கவே உள்­ளது. புதிய காபி வரவை எதிர்­பார்த்து, வியா­பா­ரிகள் அதி­க­ளவில் இதனை கொள்­முதல் செய்­யாமல் உள்­ளனர்.காபியின் பண்ணை விலை, கடந்­தாண்­டுடன் ஒப்­பி­டு­கையில், 35 சத­வீதம் வரை உயர்ந்­து உள்­ளது.
குறிப்­பாக, கடந்­தாண்டில், 50 கிலோ அரா­பிகா காபியின் பண்ணை விலை, 6,393 ரூபா­யாக இருந்­தது. இது, நடப்­பாண்டு செப்­டம்­பரில், 9,712 ரூபா­யாக அதி­க­ரித்­உள்­ளது.இதே போன்று, 50 கிலோ எடை கொண்ட ரோபஸ்டா வகை காபியின் விலையும், 2,945லிருந்து, 3,384 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
எனினும், பண்­ணை­யா­ளர்கள் மற்றும் ஏற்­று­ம­தி­யா­ளர்கள், இன்னும் விலை அதி­க­ரிக்கும் என்ற எதிர்­பார்ப்பால், காபியை அதி­க­ளவில் கையி­ருப்பில் வைத்­துள்­ளனர் என, யு.எஸ்.டி.ஏ., தெரி­வித்­துள்­ளது.கையி­ருப்பு அதி­க­ரித்­துள்­ள­தை­ய­டுத்து, நடப்­பாண்டில், இந்­தி­யாவின் ஒட்டு மொத்த காபி சப்ளை, 83 லட்சம் மூட்­டை­க­ளாக இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இது, கடந்­தாண்டில், 81.50 லட்சம் மூட்­டை­க­ளாக இருந்­தது.
வேளாண் நடை­மு­றைகள் மேம்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து, கர்­நா­ட­காவில், ரோபஸ்டா காபி உற்­பத்தி, கடந்­தாண்டை விட சிறப்­பாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதே­ச­மயம், இரண்­டாண்­டு­க­ளுக்கு ஒரு முறை உற்­பத்தி சரி­வ­டையும் என்ற நிலைப்­பாட்டால், அரா­பிகா காபி உற்­பத்தி குறையும் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
நடப்பு 2014–15ம் சந்தைப் பரு­வத்தில், காபி உற்­பத்தி, 51 லட்சம் மூட்­டை­க­ளாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது, கடந்த 2013–14ம் பரு­வத்தில், 50.70 லட்சம் மூட்­டை­க­ளாக இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)