பதிவு செய்த நாள்
18 டிச2014
11:02
பிரேக், வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான உயிர்நாடி என்றே சொல்லாம். அந்த அளவிற்க்கு பிரேக் மிக முக்கியமானது. பைக் பிரேக்கில் பராமரிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகளை காணலாம். பொதுவாக பைக்களில் இரண்டு வகையான பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை, டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக்.
டிஸ்க் பிரேக்: தற்போது அதிகப்படியான மோட்டார் சைக்கிள்களில் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்படுகின்றன. முன்புற சக்கரங்களுக்கு அதிகப்படியான வாகனங்களுக்கு டிஸக் பிரேக் தான் பயன்படுத்தப்படுகிறது. சில வாகனங்களில் பின்புறமும் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்படுகிறது.
கவனிக்க வேண்டியவை: பிரேக் ஆயில் முக்கியமாக, டிஸ்க் பிரேக்களில் பிரேக் ஆயிலை சரியான அளவுகளில் பராமரித்தல் மிகவும் அவசியமானது. சரியான அளவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். பிரேக் ஆயிலின் கலனை திறக்கும் பொழுது மிக கவனமாக திறத்தல் அவசியம். பிரேக் ஆயில் வண்டியின் மேற்பகுதியில் அல்லது பெயின்ட் பூசப்பட்ட பகுதிகளில் பட்டால் அதிகப்படியான பாதிப்பு ஏற்படும்.
பிரேக் பேட்: பிரேக் ஆயிலை தொடர்ந்து பிரேக் பேடை பராமரிப்பது அவசியம். பிரேக் பேட் அதிகப்படியான அழுத்தங்களால் தொடர்ந்து தேய்மானமடையும் என்பதால் கவனமாக கண்காணிக்க வேண்டும். பிரேக் பேட் முனைகள் மற்றும் தேய்மானத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தரமற்ற பிரேக் பேட் வாங்கக் கூடாது.
டிரம் பிரேக் : இந்த வகையான பிரேக் பழமையானவை. அதிகப்படியான வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பிரேக் ஷூ, உராய்வை ஏற்படுத்தி சக்கரத்தின் சுழற்ச்சியை தடை செய்யும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|