பதிவு செய்த நாள்
21 டிச2014
02:19
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 32 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,539 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,312 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,150 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஒன்பது ரூபாய் உயர்ந்து, 2,548 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 72 ரூபாய் அதிகரித்து, 20,384 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 100 ரூபாய் உயர்ந்து, 27,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 39.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 37,105 ரூபாய்க்கும் விற்பனையானது.
டிச., 15ல், ஒரு கிராம் தங்கம், 2,552 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,416 ரூபாய்க்கு விற்றது. இதையடுத்து, கடந்த வாரத்தில், தங்கம் விலை கிராமுக்கு, நான்கு ரூபாயும், சவரனுக்கு, 32 ரூபாயும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|