இந்தியாவில் அறிமுகமானது இத்தாலியின் பெனல்லி பைக்இந்தியாவில் அறிமுகமானது இத்தாலியின் பெனல்லி பைக் ... இரட்டை வண்ணங்களில் யமகா பைக் இரட்டை வண்ணங்களில் யமகா பைக் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டிஎஸ்கே – பெனெல்லி சென்னையில் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2015
15:14

சென்னையில் இந்தியாவின் சூப்பர்பைக் சந்தையில் முன்னணியில் இருக்கும் டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் நிறுவனம், தன விசேஷ ஷோரூமைத் திறக்கிறது. இத்தாலியின் சூப்பர் பைகில் பிராண்டான பெனெல்லிக்காக இதைத் துவக்குகிறது. ஜெமினி மேம்பாலம் அருகே, அண்ணாசாலையில், தரைத்தளம் ஒன்றில் துவக்கப்படும் இதில், டிஎஸ்கே பெனெல்லி பைக்குகளின் அனைத்து வகைகளும் விற்பனைக்குக் கிடைக்கும். பவர் – சூப்பர் பைக்குகளாகும் இவை.
ஸ்போர்டி அழகுடன், டிஎம்டி 300 (2 சிலிண்டர் மற்றும் 300 சிசி இன்ஜின்), டின்டி 600ஐ (4 சிலிண்டர் – 600 சிசி) டிஎன்ஜிடி 899 (3 சிலிண்டர் – 898 இன்ஜின்) மற்றம் டிஎன்டி – ஆர் (3 சிலிண்டர் – 1131 சிசி) ஆகிய மாடல்களில் பைக்குகள் உள்ளன.
டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் நிறுவனத்தலைவர் ஷிரிஸ் குல்கர்னி கூறும்போது, ‘டிஎஸ்கே பெனெல்லி நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருமு் மிகச் சிறப்பான பயிற்சி பெற்றுள்ளவர்கள். விற்பனை, சர்வீஸ், உதிரி பாகங்கள், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் மேலாண்மைத் திறன் பெற்றுள்ளனர். இந்தியாவிலுள்ள அனைத்து டிஎஸ்கே பெனெல்லி ஷோரூம்களும் சர்வதேச தரத்திலானவை; சர்வதேச சிஐ தரத்திலானவை’ என்றார்.
பெனெல்லி நிறுவனத்தின் இயக்குனர் ஜார்ஜ் வாங் கூறுகையில், ‘சந்தை முன்னணி நிறுவனமான டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்கிறோம். இங்கே அமைந்துள்ள ஷோரூம், அழகிய டிசைனுடன் பெனெல்லி பைக்குகளின் மரபுசார் பெருமிதத்தை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ், அனைத்து வகையான பெனெல்லி பைக்குகளையும் விற்பனை செய்யும்’ என்றார்.
டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் நிறுவனம், பெனெல்லி பைக்ககளை அசெம்பிளி செய்து விற்பனை செய்கிறது. விற்பனைக்கு பிந்திய சேவை, உதிரி பாகங்கள் விற்பனையிலும் நாடு முழுக்க சிறந்த பெயர் பெற்றதாக விளங்குகிறது. 24X7 பழுது சேவையும் வழங்குகிறது.
எக்ஸ் ஷோரூம் சென்னை விலைப்பட்டியல்* டிஎன்டி 300 எம் ரூ.2,88,000* டிஎன்டி 300 பி ரூ.2,97,000* டிஎன்டி 600 ஐ ரூ.5,24,000* டிஎன்டி 600 ஜிடி ரூ.5,72,000* டிஎன்டி 600 ஜிடிஎஸ் ரூ.6,09,000* டிஎன்டி 899 ரூ.9,65,000* டிஎன்டி ஆர் எம் ரூ.12,02,000
ஏறக்குறைய, 5,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து லாபம் கண்ட டிஎஸ்கே குழுமத்தின் ஒரு அங்கம், டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ். இது, 2012ல் துவங்கப்பட்ட நிறுவனமாகும். அதிக சக்தி வாய்ந்த விலை உயர்ந்த பைக்குகள் விற்பனை மூலம், வாகன துறையில் நுழைந்தது. ஷிரிஸ்குல்கர்னி இதன் தலைவராக செயல்படுகிறார். மகாராஷ்டிராவில், சிகேடி தொழிற்சாலையை கொண்டுள்ளது. ஷை எண்ட் பைகிங் அனுபவத்திற்கு, இந்தியாவில் டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் தான் புகழ் பெற்றுள்ளது.
பெனெல்லி குறித்து: 1911ல், பெனெல்லி கேரேஜ் என்று ஆறு சகோதரர்களால் துவங்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் தயாரித்து, பழுது சேவையும் புரிந்து வந்தது. 1921ல் சிங்கிள் சிலிண்டர் – 2 ஸ்ட்ரோக் 75 சிசி பைக்கை வெசோ மோட்டோர் எனும் பெயரில் தயாரித்தது. 175 சிசி. மாடலில் முதலாவது பெனெல்லி மோட்டார் சைக்கிளிளை தயாரித்து, கடைசி சகோதரர் டோனினோ ஒட்டி, உலகப் போட்டியில் வெற்றியும் பெற்றது. 1950 மற்றும் 1969ல் இத்தாலிய சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் வென்றது; உலகப்பட்டம் பெற்றது. தொடர்ந்த உற்பத்தில், 2001ல் டோர்னாடோ 899 சிசி பைக் வௌியானது. பின், 1,131 சிசி பைக்குடன், உலகிலேயே மிகப் பெரிய திறன் வாய்ந்த ஸ்டோர்ட்ஸ் மோட்டோர் சைக்கிள் தயாரிப்பாளர் எனப் பெயர் பெற்றது. தற்போது, குயான்ஜியாங் குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)