வெற்றி தரும் ஐந்து மாற்றி யோசி மந்­தி­ரங்கள்வெற்றி தரும் ஐந்து மாற்றி யோசி மந்­தி­ரங்கள் ... தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? ...
பெண்கள் போல முத­லீடு செய்­யுங்கள்!- இது வாரன் பப்பே வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2015
01:21

ஆண்கள் முத­லீடு செய்யும் விதத்­திற்கும், பெண்கள் முத­லீடு செய்யும் விதத்­திற்கும் வேறு­பாடு இருக்­கி­றதா? என யோசித்­த­துண்டா? யோசிக்க வேண்டும் என, வலி­யு­றுத்­து­கி­றது, வாரன் பப்பே ஒரு பெண் போல முத­லீடு செய்­கிறார் எனும் புத்­தகம். லுவான் லாப்டன் எனும் முத­லீட்டு வல்­லுனர் எழு­தி­யி­ருக்­கிறார்.
பெண் முத­லீட்­டா­ளர்­க­ளிடம் காணப்­படும் பண்­புகள் அனைத்தும் முத­லீட்டு மகா­ரா­ஜா­வான வாரன் பப்­பே­விடம் இருப்­பதை சுட்­டிக்­காட்டி அத­ன­டிப்­ப­டையில் சரா­சரி முத­லீட்­டாளர் பின்­பற்ற வேண்­டிய கோட்­பா­டு­களை எட்டு முக்­கிய அம்­ச­மாக புத்­தகம் முன்­வைக்­கி­றது.
சபலம் வேண்டாம்
பங்­கு­களை எப்­போதும் கையில் வைத்­தி­ருப்­பது தான் எனக்கு பிடித்­த­மான பங்கு இருப்பு காலம் (ஹோல்டிங் பீரீட்) எனும் கருத்­திற்­காக வாரன் பப்பே அறி­யப்­படுகிறார். இதன் பொருள் பங்­கு­களை பொறு­மை­யாக வைத்­தி­ருக்க வேண்டும் என்­ப­தாகும். முத­லீடு செய்யும் நிறு­வன பங்­கு­களை அதிக காலம் வைத்­தி­ருக்க பப்பே வலி­யு­றுத்த காரணம், ஒருவர் வாங்­கு­வது பங்கை அல்ல; வர்த்­த­கத்தை என்­பதால் தான்.
தெரிந்த துறை:நீண்டகால முத­லீடு மட்டும் அல்ல, உங்­க­ளுக்கு நன்கு தெரிந்த துறையில் முத­லீடு என்­பதும் பப்பே பின்­பற்றும் கோட்­பாடு. அவர் தனக்கு தெரி­யாத, புரி­யாத துறை­களில் முத­லீடு செய்ததே இல்லை. பப்பே தொழிற்­நுட்ப நிறு­வ­னங்­களின் பக்­கமே போன­தில்லை.
‘ரிஸ்கா’ ஓடுங்கள் :தெரிந்த துறையில் நீண்டகால முத­லீடு, சிறு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அள்­ளித்­தரும் என்­பது பப்பே நம்­பிக்கை. மேலும், அவர் ரிஸ்­கிற்கு எதி­ரா­னவர் என்­பது இதற்கு வலுசேர்க்­கி­றது. ஆனால் எல்லா முத­லீ­டு­க­ளுமே ரிஸ்­கா­னவை என்­பதால், முடிந்­த­வரை ரிஸ்கை குறைப்­பது தான் நல்ல முத­லீடு.
சந்­தே­கமே சாதகம்:பப்பே நம்­பிக்­கை­வாதி. ஆனால் அவ­நம்­பிக்கை மிக்க நேரங்கள், நீண்டகால நோக்கில் பலன் தரும் வாய்ப்பை கொண்­டி­ருப்­பவை என அறிந்த புத்­தி­சாலி. அதனால் தான், 2008ல் அமெ­ரிக்கா முழு­வதும் பங்­கு­களின் வீழ்ச்­சியால் வெறுத்­து­போ­யி­ருந்த நேரத்தில், அமெ­ரிக்க பங்­கு­களை வாங்­கவும் என, அறை­கூவல் விடுத்தார். ஏற்ற இறக்­கங்­களால் அதிகம் சல­னப்­ப­டாமல் செயல்­ப­டுங்கள்.
ஆய்வு! ஆய்வு!:முத­லீடு என்­பது சும்­மா­யில்லை. காதில் கேட்ட குறிப்பை வைத்து பங்­கு­களை வாங்க முடி­யா­து, -­கூ­டாது! அதற்கு முன், வாங்க உள்ள நிறு­வனம் பற்றி நன்கு ஆய்வு செய்ய வேண்டும். நிறு­வன செயல்­பாடு, அது வருவாய் ஈட்டும் வழி எல்­லா­வற்­றையும் அறிய வேண்டும்.
காது­களை மூடுங்கள்:உங்கள் ஆய்வு மீது நம்­பிக்கை கொள்­ளுங்கள்; உள்­மனம் சொல்­வதை கேளுங்கள். மற்­ற­வர்கள் சொல்­வதை கேட்டு சலனம் அடைய வேண்டாம். அதா­வது நண்­பர்­களும், தெரிந்­த­வர்­களும் சொல்­வதை கேட்டு முடிவு எடுக்க வேண்டாம்.
தவ­றுகள், பாடங்கள்: பப்பே பங்­குச்­சந்தை மேதை தான். ஆனால் அவரும் தவ­றுகள் செய்­தி­ருக்­கிறார். அவற்றில் இருந்து பாடம் கற்­றுக்­கொண்­டி­ருக்­கிறார். முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இருக்க வேண்­டிய அருங்­குணம் இது. அதிக துடிப்பு வேண்டாம்மிகவும் துடிப்­பாக இருக்க வேண்டாம். அமை­தி­யாக இருங்கள். இது ரிஸ்­கையும் குறைக்கும். மேலே சொன்ன எல்லா குணங்­க­ளுக்கும் வித்­திடும்.

சேமிப்பின் 4 இலக்குகள்
1. சீரான சேமிப்புமுதலில் சேமிப்பு சீராக இருக்க வேண்டும். சேமிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்­தாலும் எல்லா­ருமே சேமிப்­ப­தில்லை. இதற்கு பல கார­ணங்கள் இருக்­கலாம். ஆனால் சேமிக்­கத்­ து­வங்கும் போது அதை தொடர்ந்து மேற்­கொள்ள வேண்டும். ஒரு குறிப்­பிட்ட தொகையை குறிப்­பிட்ட இடை­வெ­ளியில் சீராக சேமித்து வர வேண்டும். அடாது மழை பெய்­தாலும் விடாது நாடகம் நடக்கும் என்­பார்­களே, அதே போல, எந்த சூழ­லிலும் விடாமல் சேமிக்க வேண்டும்.
2. சேமிப்பு இலக்கு
சேமிப்பை தொடர்ந்து மேற்­கொள்ளும் போது அதற்­கென ஒரு இலக்கு இருந்­தாக வேண்டும். அதா­வது எதற்­காக சேமிக்­கி­றீர்கள் என, ஒரு தெளி­வான திட்டம் இருக்க வேண்டும். இலக்கு என்­பது அவ­ரவர் தேவைக்கு ஏற்ப என்­ன­வாக வேண்­டு­மா­னாலும் இருக்­கலாம். சொந்த வீட்­டிற்­கான முன்­ ப­ணத்­திற்­காக, கார் வாங்குவதற்காக, விடு­முறை பய­ணத்­திற்­காக என, அது என்னவாக இருந்தாலும், நம்முடைய இலக்கு தெளிவாக இருக்க வேண்டும்.
3. வேண்டும் முன்­னு­ரிமை:இலக்கு என்று வரும்போது சில நேரங்­களில் ஒன்­றுக்கு மேற்­பட்ட தேவை­களும் இருக்­கலாம். உதா­ர­ண­மாக ஒருவர் வீடு வாங்க வேண்டும்; கார் வாங்க வேண்டும்; பிளாஸ்மா டிவி வாங்க வேண்டும் என விரும்­பலாம். இந்த விருப்ப பட்­டி­யலில் எந்த தவறும் இல்லை. ஆனால் சேமிப்பு முதிரும் போது, இவற்றில் எதற்கு முதலில் செல­வி­டு­வது என, முன்­னு­ரிமை அளிக்க வேண்டும்.
4 சேமிப்பு பாது­காப்பு :இறு­தி­யாக சேமித்த பணத்தை அப்­ப­டியே துாங்கி கொண்­டி­ருக்க அனு­ம­திக்க கூடாது. அந்த பணம் செலவாகாமல் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க வேண்டும். சேமிப்பு கணக்கில் வைத்­தி­ருந்தால் கூட கிரெடிட் கார்டில் தேய்த்து பாழாக்கி விடலாம் அல்­லவா? இதை தவிர்க்க பணத்தை முத­லீடு செய்­வதே நல்ல வழி.
முதலீட்டு மந்திரம்: உரக்க புகார் செய்யுங்கள்
ஐகான் அமெரிக்க கோடீஸ்வரர்களில் ஒருவர். எல்லாமே அவர் சுயமாக சம்பாதித்தது; முதலீடு மூலம் ஈட்டியது. ஆனால் அவர், வழக்கமான முதலீட்டாளர் இல்லை. அவர், முதலீடு போராளி. அவரது, செயல்பாடு கொஞ்சம் காட்டமானது; சர்சைக்குரியது! நலிவடையும் நிலையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, அதன் இயக்குனர் குழுவில் நுழைந்து, பின்னர் நிறுவனத்தையே கட்டுப்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெறுவது அவரது ஸ்டைல். நிறுவனங்களுக்கு அவர் எட்டிக்காய் என்றாலும், அவர் குரல் கொடுப்பது என்னவோ பங்குதாரர்களில் ஒருவராக தான். இவர் அழுத்தந்திருத்தமாக சொல்வது, முதலீட்டாளர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட, முதலில் உரக்க குரல் கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)