குரல் பாஸ்வேர்டு : ஐ.சி.ஐ.சி.ஐ. அறிமுகம்குரல் பாஸ்வேர்டு : ஐ.சி.ஐ.சி.ஐ. அறிமுகம் ... பாபிலோன் பணக்­காரர் காட்டும் வழி பாபிலோன் பணக்­காரர் காட்டும் வழி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அரசு காப்­பீட்டு திட்­டங்கள், ஒரு பார்வை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2015
06:37

அனைத்து மக்­க­ளுக்கும் பர­வ­லாக காப்­பீடு சென்று அடைய வேண்டும் எனும் நோக்­கத்­துடன் மத்திய அரசு சார்பில் மூன்று திட்­டங்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. இந்த அரசு காப்­பீட்டு திட்­டங்­களை, பொதுத்­துறை வங்­கிகள் மட்டும் அல்­லாமல் தனியார் வங்­கி­களும் ஆர்­வத்­துடன் முன்­வைத்து உறுப்­பி­னர்­களை சேர்த்து வரு­கின்­றன. இந்த திட்­டங்­களின் முக்­கிய அம்­சங்கள் மற்றும் பலன்கள் பற்றி ஒரு பார்வை...
பிரதான் மந்­திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
இது ஒரு ‘டெர்ம் இன்­சூரன்ஸ்’ திட்டம். ஓராண்­டுக்­கா­னது. ஆண்­டு­தோறும் புதுப்­பித்துக் கொள்­ளலாம். வங்­கியில் சேமிப்பு கணக்கு உள்ள, 18 முதல் 50 வயது வரை உள்ள எவரும் இதில் சேரலாம். இதற்­கான பிரீமியம் தொகை, 330 ரூபாய். ஆகஸ்ட் 31 வரை இதில் சேரலாம். தேதி, மேலும் நீட்­டிக்­கப்­பட வாய்ப்­புள்­ளது.
பாலி­சி­தாரர் இறக்க நேர்ந்தால், அவ­ரது குடும்­பத்­திற்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த திட்­டத்தில் சேர மருத்­துவச் சோத­னை­களோ, பெரிய அளவில் ஆவ­ணங்­களோ தேவை­யில்லை. எனவே, எளி­தாக இந்த திட்­டத்தில் சேரலாம். டெர்ம் இன்­சூ­ரன்­சுக்­கான பாலிசி தொகை, ஒரு­வரின் ஆண்டு வரு­மா­னத்தைப் போல, 10 மடங்­காக இருக்க வேண்டும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. அந்த வகையில், இந்த திட்டம், மாதம், 2,000 ரூபாய் வரு­மானம் பெறு­ப­வர்­க­ளுக்கே ஏற்­ற­தாக இருக்கும்.மேலும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு பிறகு பிரீமியம் தொகை மாறு­வ­தற்­கான வாய்ப்­பி­ருக்­கி­றது.
பிரதான் மந்­திரி சுரக் ஷா பீமா யோஜனா
இது, விபத்து காப்­பீட்டு திட்டம். விபத்து மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய உயிர் இழப்பு மற்றும் நிரந்­தர உடல் ஊனத்­திற்­கான பாலிசி இது. 18 வயது முதல், 70 வய­தான எவரும் இதில் சேரலாம். பிரீ­மியம் தொகை ஆண்­டுக்கு, 12 ரூபாய் மட்­டுமே. பாலி­சி­தா­ரரின் வங்கி கணக்கில் இருந்து பிரீ­மியம் தொகை பிடித்துக் கொள்­ளப்­படும். குறைந்த கட்டணத்தில் விபத்து காப்­பீடு என்­பது சாத­க­மான அம்­ச­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது. விபத்தில் உயி­ரி­ழப்பு ஏற்­பட்டால் அல்­லது இரு கண்கள் அல்­லது இரு கைகள் அல்­லது இரு கால்கள் இழக்கும் நிலை ஏற்­பட்டால், 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அடல் பென்ஷன் யோஜனா
இது, ஓய்­வூ­திய திட்டம். முறை­சாரா துறையில் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்­காக கொண்டு வரப்­பட்­டுள்­ளது. 18 வயது முதல், 40 வயது வரை உள்­ள­வர்கள் இதில் சேரலாம். குறைந்­த­பட்சம், 20 ஆண்­டு­க­ளுக்கு இதில் பங்­கேற்க வேண்டும். உறுப்­பி­னர்கள் மாதந்­தோறும் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, 60 வய­துக்கு பிறகு, மாதம் 1,000, 2,000, 3,000, 4,000 மற்றும் 5,000 ரூபாய் வரை கிடைக்கும். பாலி­சி­தாரர் இறந்­து­விட்டால், அவ­ரது கணவர் அல்­லது மனை­விக்கு பென்ஷன் கிடைக்கும். இந்த திட்­டத்தின் கீழ் அரசும், 2020ம் ஆண்டு வரை குறிப்­பிட்ட தொகையை செலுத்தும். மொத்த தொகையின், 50 சத­வீதம் அல்­லது 1,000, இவற்றில் எது குறை­வாக உள்­ளதோ அதை அரசு செலுத்தும். ஜூன் முதல் டிசம்பர் வரை­யான காலத்தில் சேரு­ப­வர்­க­ளுக்கு இது பொருந்தும். வேறு எந்த சமூக பாது­காப்பு திட்­டத்­திலும் சேரா­த­வர்கள் மற்றும் வரு­மான வரி செலுத்­தா­த­வர்­க­ளுக்கு மட்­டுமே, இந்த சலுகை பொருந்தும்.
எனினும் தேசிய பென்ஷன் திட்டம் போல இதில் உறுப்­பி­னர்கள் முத­லீட்டு முறையை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்­பில்லை. முறை­சாரா துறையில் இருப்­ப­வர்­க­ளுக்கு ஓய்­வூ­தியம் கிடைக்­கச் ­செய்­வது நல்ல விஷயம் என்­றாலும், 20 ஆண்­டுகளுக்குப்பின், பண­வீக்­கத்தை கணக்­கிட்டுப் பார்த்தால், ஓய்­வூ­தியத் தொகை மிகவும் குறைவு எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)