ரூ. 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது தங்கம் ரூ. 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது தங்கம் ... தங்கம் விலை ரூ. 20 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை ரூ. 20 ஆயிரத்தை எட்டியது ...
யூப் டிவிக்கு ரெட் ஹெரிங் விருது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2015
08:40

ஐதராபாத் : லைவ் டிவி, வீடியோ ஆன் டிமாண்‌ட், ஆன் டிமாண்ட் மூவி சொல்யூசன்ஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருவதில் முன்னணி நிறுவனமாக உள்ள யூப் டிவி நிறுவனம், வட அமெரிக்காவின் உயரிய விருதான "ரெட் ஹெரிங்" விருதை வென்றுள்ளது.சர்வதேச அளவில், டெக்னாலஜி இண்டஸ்ட்ரி, இன்வெஸ்டர்ஸ், எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் மீடியா உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும், 100 நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, அவர்களை கவுரவிக்கும் வகையில், ரெட் ஹெரிங் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், யூப் டிவி நிறுவனம், இந்த விருதை வென்றுள்ளது. ரெட் ஹெரிங் விருதுக்கு தேர்வான 100 நிறுவனங்களில், யூப் டிவி நிறுவனம் மட்டுமே, எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் மீடியா பிரிவில் , இந்த விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.நிறுவனங்களின் சேவையை கவுரவிக்கும் வகையில், 1996ம் ஆண்டு முதல் ரெட் ஹெரிங் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, நிறுவனங்களின் அப்போதைய நிலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அந்நிறுவனங்கள் இந்தளவிற்கு முன்னேற வகுத்த பாதைகள், எதிர்கொண்ட இன்னல்கள் அதை முறியடிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், மக்களுக்கு, இந்நிறுவனத்தின் மேல் உள்ள நன்மதிப்பு உள்ளிட்டவைகளை கருத்தில்கொண்டே, நிறுவனங்களை மதிப்பீடு செய்கிறோம். 2015ம் ஆண்டின் விருதிற்காக, கிட்டத்தட்ட 1,200 நிறுவனங்களை, எங்களது எடிட்டோரியல் டீம், ஆய்விற்கு மேற்கொண்டோம். தொழில்முனைவோர்கள் சமீபகாலமாக, சர்வதேச அளவில் அதிகரித்து வருவதால், சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்று அவர்களுக்குள் பெரும்போட்டியே நிலவிவருகிறது. அவற்றிலிருந்து 100 நிறுவனங்களை பல்வேறு வழிமுறைகளை மேற்‌கொண்டு தேர்ந்தெடு்த்துள்ளாக ரெட் ஹெரிங் நிறுவன த‌‌லைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் வியூக்ஸ் கூறினார்.கூகுள், பேஸ்புக், டுவிட்டர், ஸ்கைப், இபே என முன்னணி நிறுவனங்கள் மட்டுமே, இந்த விருதுகளை பெற்றிருந்த நிலையில், இத்துறையில் கால்பதித்து சில ஆண்டுகளே ஆன தங்கள் நிறுவனமும் இவ்விருதை வென்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக யூப் டிவி தலைமை செயல் அதிகாரி உதய்நாதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)