பதிவு செய்த நாள்
03 செப்2015
14:16
வெஸ்பா ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம், ‘வி.எக்ஸ்.எல்., – எஸ்.எக்ஸ்.எல்.,’ என்ற பெயரில் சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்களை, அறிமுகம் செய்துள்ளது இவை, மூன்று வால்வ், சிங்கிள் சிலிண்டர், 150 சி.சி., திறனுடையவை. 11.44 குதிரை சக்தி திறன் கொண்டவை; இப்பிரிவில், 125 சி.சி., ஸ்கூட்டர்களையும் வெஸ்பா, தற்போது சந்தைப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல்களில், ‘டிஜிட்டல் கன்சோல்’, 11 அங்குல உலோக சக்கரங்கள், ‘டியூப்லெஸ் டயர்ஸ்’, முன்பக்க ‘டிஸ்க் பிரேக்’ என பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ‘எஸ்.எக்ஸ்.எல்.,’ மாடல், ஆரஞ்சு உள்ளிட்ட, ஐந்து வண்ணங்களிலும், ‘வி.எக்ஸ்.எல்.,’ மாடல், மஞ்சள் உள்ளிட்ட, ஆறு வண்ணங்களிலும் கிடைக்கும்.
‘எஸ்.எக்ஸ்.எல்.,’ 150 சி.சி., ஸ்கூட்டர் விலை, 88,696 ரூபாயில் இருந்தும், 125 சி.சி., ஸ்கூட்டர் 81,927 ரூபாயில் இருந்தும் துவங்குகின்றன. ‘வி.எக்ஸ்.எல்.,’ 150 சி.சி., ஸ்கூட்டர் விலை, 86,641 ரூபாயில் இருந்தும், 125 சி.சி., ஸ்கூட்டர், 77,308 ரூபாயில் இருந்தும் துவங்குகின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|