பதிவு செய்த நாள்
04 செப்2015
12:51
ரெனோ நிறுவனம், பிரசித்தி பெற்ற, ‘டஸ்டர்’ எஸ்.யு.வி.,யை பின்பற்றி, அடுத்ததாக, ரெனோ, ‘டஸ்டர் எக்ஸ்புளோர்’ மாடலை, புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ரக டீசல் வாகனம், குறுகிய கால விற்பனை அடிப்படையில் சந்தைக்கு வந்துள்ளது. இது, 85 பி.எஸ்., ஆர்.எக்ஸ்.எல்., எக்ஸ்புளோர் மற்றும் 110 பி.எஸ்., ஆர்.எக்ஸ்.எல்., எக்ஸ்புளோர் ஆகிய இரு மாடல்களில் கிடைக்கும்.
இவற்றின் ஷோ ரூம் விலை, முறையே, 9.99 லட்சம் ரூபாய் மற்றும், 11.10 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. டஸ்டர் வாகனத்தை காட்டிலும், இன்னும் நேர்த்தியாக இருக்கும் வகையில், புதிய வாகனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முன்புறத்தில் சற்று கருமையுடன் கூடிய, ‘கிரில்’ புதிய வகை, ‘ஹெட்லேம்ப்’ முன்புற பம்பரில், கூடுதல் விளக்குகளுடன் கூடிய, ‘புல்பார்’ அமைக்கப்பட்டு உள்ளது. இதில், கியர் மாற்றல் இன்டிகேட்டர், இரு வண்ணங்களை உடைய இருக்கைகள், ‘ஸ்பீட் லிமிட்டர்’ உடன் கூடிய, ‘க்ரூஸ் கன்ட்ரோல்’ போன்ற வசதிகள் உள்ளன.
இவற்றில், டஸ்டர் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே, 1.5 லிட்டர் கே.9கே. டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|