பதிவு செய்த நாள்
03 அக்2015
15:29
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ., மேம்படுத்தப்பட்ட, ‘எம் சீரிஸ் எம்6 கிரான் கூபே’ காரை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலில் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள், இதிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் புறத்தோற்றத்தில், பி.எம்.டபிள்யூ.,க்கே உரித்தான முன்புற எல்.இ.டி., விளக்குகள், ‘கிட்னி கிரில்’ வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
காரின் உட்புறத்தில், ஓட்டுனரின் வசதியை கருத்தில் கொண்டு, காரின், ‘கன்சோல்’ (எம்–கன்சோல்) அவருக்கு எளிதில் எட்டக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள, 4.4- லிட்டர், ‘டுவின் டர்போ வி8 இன்ஜின்’ 552 குதிரைசக்தி திறனை உற்பத்தி செய்கிறது. ஏழு கியர்கள் கொண்ட இந்தக் கார், புறப்பட்ட, 4.2 வினாடிகளில், 100 கி.மீ., வேகத்தை எட்டும் என, பி.எம்.டபிள்யூ., நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஷோரூம் விலை, 1.7 கோடி ரூபாயில் இருந்து துவங்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|