பதிவு செய்த நாள்
08 அக்2015
17:57
சிறிய ரக கார் பிரிவில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, கடந்த மாதம் அறிமுகமான, ரெனோ நிறுவனத்தின், ‘க்விட்’ கார், எதிர்பார்த்தபடியே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு சில வாரங்களிலேயே, 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், அதை வாங்குவதற்காக முன்பதிவு செய்துள்ளனர். சிறிய ரக கார் பிரிவில், போட்டியாளர்களின் வாகனங்களை விட, அதிக சிறப்பம்சங்கள் கூடிய, ‘க்விட்’ காரை, அந்நிறுவனம் பெரிதும் நம்பியிருந்தது. அதிக இடம் கொண்ட டிக்கி, மடங்கக் கூடிய பின் இருக்கை, ஏழு அங்குல தொடுதிரை, சிறிய, எஸ்.யு.வி., போன்ற தோற்றம் என பல அம்சங்களுடன், வந்திருக்கும் க்விட் கார், அந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்தியாவில், அதிக மைலேஜ் தரக்கூடியது என விளம்பரப்படுத்தப்பட்ட, இந்த காரின் ஷோரூம் துவக்க விலை, 2.57 லட்சம் ரூபாய்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|