பதிவு செய்த நாள்
28 நவ2015
15:01
மகிந்திரா நிறுவனம், ‘ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்’ பொருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட, ‘எக்ஸ்யுவி 500’ எஸ்.யு.வி.,யை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன், ‘பிரன்ட் வீல் டபிள்யூ 8’ மாடலில், இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது, ‘டபிள்யூ 8 எப்டபிள்யூ டி; டபிள்யூ 10 எப்டபிள்யூ டி மற்றும் டபிள்யூ 10 ஏடபிள்யூ டி’ என, மூன்று பிரிவுகளில் களம் கண்டுள்ளது. ‘மேனுவல்’ மாடல் எக்ஸ்யுவி 500 போலவே, ஆட்டோமேட்டிக் மாடலிலும், 2.2 லிட்டர், நான்கு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டில்லியில், இதன் ஷோரூம் விலை, 15.53 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. ஆறு கியர்களை உடைய, ‘எக்ஸ்யுவி 500 ஆட்டோமேட்டிக்’ வாகனம், ‘ஹுண்டாய் கிரெட்டா ஆட்டோமேட்டிக்’ வாகனத்துடன் சந்தையில் மல்லுக்கட்டும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|