பொறி­யியல் சாத­னங்கள் ஏற்­று­மதி சரிவுபொறி­யியல் சாத­னங்கள் ஏற்­று­மதி சரிவு ... ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.39 ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.39 ...
18 மாதங்­களில்... சர்­வ­தேச மருந்து துறை வருவாய் 4 சத­வீதம் வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2016
00:02

மும்பை : ‘சர்­வ­தேச மருந்து துறையின் வருவாய், அடுத்த, 12 – 18 மாதங்­களில், ஆண்­டுக்கு, 3 – 4 சத­வீதம் வளர்ச்சி காணும்’ என, பன்­னாட்டு தர நிர்­ணய நிறு­வ­ன­மான, மூடிஸ் இன்­வெஸ்டர் சர்வீஸ் தெரி­வித்­துள்­ளது.
இது தொடர்­பாக, இந்­நி­று­வனம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: உலக மருந்து துறையின் வளர்ச்சி, வரும் ஆண்­டு­களில் சீராக இருக்கும். புற்­றுநோய், இத­யநோய் போன்­ற­வற்­றுக்­கான மருந்­து­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்­களின் வருவாய் வளர்ச்சி அதி­க­மாக இருக்கும். அமெ­ரிக்க டாலர் மதிப்பு உயர்வால், அந்­நாட்­டுக்கு மருந்­து­களை ஏற்­று­மதி செய்யும் நிறு­வ­னங்கள் மற்றும் காப்­பு­ரிமை காலா­வ­தி­யாக உள்ள மருந்­து­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்­களின் வருவாய் வளர்ச்சி மித­மாக இருக்கும்.
அமெ­ரிக்கா, ‘பிராண்டட்’ மருந்­து­களின் மிகப் பெரிய சந்­தை­யாக திகழ்­கி­றது. அதனால், இவ்­வகை மருந்­து­களின் விலை உயர்வு, தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு சாத­க­மாக இருக்கும். இந்த மருந்­து­களின் விலையை குறைக்க முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. இருந்­த­போ­திலும், அதற்­கான சட்­டங்கள் இல்­லா­ததால், அமெ­ரிக்­காவில் மருந்­து­களின் விலை, அடி­யோடு குறையும் என, எதிர்­பார்க்க முடி­யாது. சுவாச பிரச்னை, நீரி­ழிவு உள்­ளிட்ட சில நோய்­க­ளுக்­கான மருந்­துகள் தவிர்த்து, பெரும்­பா­லான மருந்­துகள் விலை உயரும். பிராண்டட் மருந்­து­க­ளுக்கு போட்­டி­யாக, அவற்றை போன்றே, சட்­டப்­படி உரிமம் பெற்று தயா­ரிக்­கப்­படும், ‘பயோ­சி­மிலர்’ மருந்­துகள் உரு­வெ­டுத்து வரு­கின்­றன. ஆனால், அவ்­வகை மருந்­து­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்­களின் வருவாய், குறை­வா­கவே உள்­ளது.
சர்­வ­தேச அளவில், பெரிய மருந்து நிறு­வ­னங்கள், சிறிய மருந்து நிறு­வ­னங்­களை கைய­கப்­ப­டுத்­து­வது தொடரும். பல நிறு­வ­னங்கள், புதிய மருந்­து­களை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளன. இது­போன்ற கார­ணங்­களால், சர்­வ­தேச மருந்து துறையின் வருவாய், அடுத்த ஒன்­றரை ஆண்­டு­களில், ஆண்­டுக்கு, அதி­க­பட்­ச­மாக, 4 சத­வீதம் வளர்ச்சி காணும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
வட அமெ­ரிக்கா கடந்த, 2014 நில­வ­ரப்­படி, சர்­வ­தேச மருந்து நிறு­வ­னங்­களின் வருவாய், 1.05 லட்சம் கோடி டால­ராக உள்­ளது. இதில், வட அமெ­ரிக்­காவின் பங்கு, 44 சத­வீ­த­மாக உள்­ளது. வரும், 2020ல், உல­க­ளவில், மருந்­து­க­ளுக்­காக, 1.41 லட்சம் கோடி டாலர் செல­வ­ழிக்­கப்­படும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)