உணவு துறையில் முத­லீடு: பிரிட்டன் விருப்பம்உணவு துறையில் முத­லீடு: பிரிட்டன் விருப்பம் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.66.45 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.66.45 ...
சீனாவில் இருந்து... இந்­தி­யாவில் இறக்­கு­ம­தி­யாகும் 50 சத­வீத மின்­னணு சாத­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2016
06:09

புது­டில்லி : ‘‘இந்­தி­யாவின் மின்­னணு மற்றும் தொலைத் தொடர்பு சாத­னங்கள் இறக்­கு­தியில், சீனாவின் பங்கு, 50 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உள்­ளது,’’ என, மத்­திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவி­சங்கர் பிரசாத், லோக்­ச­பாவில் தெரி­வித்­துள்ளார்.
அதன் விவரம்:கடந்த, 2015 –16ம் நிதி­யாண்டில், ஏப்., – பிப்., வரை­யி­லான 11 மாதங்­களில், இந்­தியா, 3,720 கோடி டாலர் மதிப்­பி­லான மின்­னணு சாத­னங்­களை இறக்­கு­மதி செய்­துள்­ளது. இது, 2012–13ம் நிதி­யாண்டின், இதே காலத்தில், 3,350 கோடி டால­ராக இருந்­தது. இதே காலத்தில், சீனாவில் இருந்து இறக்­கு­ம­தி­யான மின்­னணு மற்றும் தொலைத் தொடர்பு சாத­னங்­களின் மதிப்பு, 1,650 கோடி டாலரில் இருந்து, 2,000 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. அதே­ச­மயம், இதே காலத்தில், இந்­தி­யாவின் மின்­னணு மற்றும் தொலைத் தொடர்பு சாத­னங்கள் ஏற்­று­மதி, 820 கோடி டாலரில் இருந்து, 530 கோடி டால­ராக சரி­வ­டைந்­துள்­ளது.
மத்­திய அரசு, 2020க்குள், மின்­னணு சாத­னங்கள் இறக்­கு­ம­தியை அறவே குறைக்க திட்­ட­மிட்­டுள்­ளது. மின்­னணு சாத­னங்­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, எம்.எஸ்.ஐ.பி.எஸ்., திட்­டத்தின் கீழ், மானியம் வழங்­கப்­ப­டு­கி­றது. சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­களில் தொழிற்­சா­லை­களை அமைக்க, 20 சத­வீ­தமும், அது சாராத பகு­தி­க­ளுக்கு, 25 சத­வீ­தமும், மூல­தன செல­வின மானியம் வழங்­கப்­ப­டு­கி­றது. இத்­திட்­டத்தின் கீழ், 2014, மே முதல் இந்­தாண்டு, மார்ச் வரை, போஷ், ஜி.இ., எல்.ஜி., மைக்­ரோமேக்ஸ் உள்­ளிட்ட நிறு­வ­னங்கள், 1.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான தொழில்­க­ளுக்கு அனு­மதி கோரி­யுள்­ளன.
பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்கள், சூரிய மின்­சக்தி தக­டுகள், தொலைத் தொடர்பு சாத­னங்கள், வாகன மின்­னணு கரு­விகள், உதி­ரி­பா­கங்கள், நுகர்வோர் மின்­னணு சாத­னங்கள் ஆகி­ய­வற்றை தயா­ரிக்க ஆர்­வ­மாக உள்­ளன. மின்­னணு வன்­பொருள் தொழில்­நுட்ப பூங்­காவில் உள்ள, ஏற்­று­மதி நிறு­வ­னங்கள், இறக்­கு­மதி செய்யும் மின்­னணு மூலப் பொருட்­க­ளுக்கு, சுங்க வரியில் இருந்து விலக்கும்; உள்­நாட்டு மூலப் பொருட்­க­ளுக்கு, உற்­பத்தி வரியில் இருந்து விலக்கும் அளிக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அவர் கூறினார்.
சீனாவில் இருந்து, மின்­னணு திரைகள், கம்ப்­யூட்டர் உதி­ரி­பா­கங்கள், மொபைல் போன்கள், நுகர்வோர் மின்­னணு சாத­னங்கள், தொலைத் தொடர்பு கரு­விகள், மின்­க­லன்கள் அதி­க­மாக இறக்­கு­ம­தி ஆ­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)