தடை கடந்து அமெ­ரிக்கா சென்ற இந்­திய மாதுளைதடை கடந்து அமெ­ரிக்கா சென்ற இந்­திய மாதுளை ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.57 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.57 ...
உல­கி­லேயே முதன் முத­லாக... சிங்­கப்பூர் வைர முத­லீட்டு சந்­தையில் வர்த்­தகம் துவங்­கி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2016
04:17

மும்பை : நிறு­வ­னங்­களின் பங்­குகள், விளை பொருட்கள், தங்கம், வெள்ளி, தாமிரம், கச்சா எண்ணெய் போன்­ற­வற்றில் முத­லீடு செய்­யவும், வர்த்­தகம் புரி­யவும், தனித்­த­னியே சந்­தைகள் உள்­ளன.அது­போல, வைரக் கற்­களில் முத­லீடு செய்­யவும், வர்த்­தகம் புரி­யவும், சிங்­கப்­பூரை தலை­மை­யி­ட­மாக கொண்டு, எஸ்.டி.ஐ.எக்ஸ்., என்ற, சிங்­கப்பூர் வைர முத­லீட்டு சந்தை துவக்­கப்­பட்­டுள்­ளது.
உல­கி­லேயே முதன் முத­லாக அமைக்­கப்­பட்­டுள்ள இச்­சந்­தையில், நேற்று, வைரங்கள் டிபாசிட், விற்­பனை உள்­ளிட்ட பரி­வர்த்­த­னைகள் துவங்­கின. உல­க­ளவில், கச்சா வைரங்­களை நறுக்­கு­வது, பட்டை தீட்­டு­வது ஆகிய பணி­களை மேற்­கொள்­வதில், இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு, 90 சத­வீ­த­மாக உள்­ளது. இத்­தொ­ழிலில், குஜ­ராத்தின் சூரத் நகரம் முத­லி­டத்தில் உள்­ளது. அதனால், இந்­ந­கரில், வைரக் கற்கள் தொழிலில் ஈடு­பட்­டுள்ள பலர், எஸ்.டி.ஐ.எக்ஸ்.,–ல் உறுப்­பி­ன­ராக சேர்ந்­துள்­ளனர்.
இது­கு­றித்து, வைர ஏற்­று­ம­தி­யாளர் ஒருவர் கூறி­ய­தா­வது:தற்­போது, வைரங்­களை நேரில் பார்த்து வாங்­கு­கிறோம். இனி அவற்றை, எஸ்.டி.ஐ.எக்ஸ்., வலை­தளம் வாயி­லா­கவே வாங்­கலாம், விற்­கலாம். அனைத்து வைரக் கற்­க­ளுக்கும், ஜி.ஐ.ஏ., எனப்­படும், அமெ­ரிக்க நவ­ரத்­தி­னங்கள் மையம், தரச் சான்று வழங்கும். அந்த சான்­றி­தழின் அடிப்­ப­டையில், எஸ்.டி.ஐ.எக்ஸ்., வலை­த­ளத்தில் நேர­டி­யாக வைரங்­களை வாங்­கலாம், முத­லீடு செய்­யலாம்; விலை ஏறும்­போது விற்­பனை செய்­யலாம்.
ஒரு வைரக்கல் முதல், பல வைரங்கள் கொண்ட தொகுப்பை, இச்­சந்­தையில் வாங்­கலாம். சுல­ப­மான வர்த்­தக நடை­முறை, தரத்­திற்கு உத்­த­ர­வாதம், வெளிப்­ப­டை­யான விலை ஆகி­யவை, இச்­சந்­தையின் சிறப்­பம்­சங்கள். எஸ்.டி.ஐ.எக்ஸ்.,மூலம் வாங்கும் அல்­லது விற்­கப்­படும் வைரங்­களை பாது­காப்­பாக சேமித்து வைக்கும் பணியில், சர்­வ­தேச நிதி மேலாண்மை நிறு­வ­ன­மான, மல்கா – அமிட் ஈடு­பட்­டுள்­ளது. இந்­நி­று­வனம், முத­லீட்­டா­ளர்­களின் வைரங்­களை, மும்­பையில் உள்ள பாரத் வைரச் சந்­தையில் உள்ள கிடங்கில் சேமித்து வைக்­கி­றது. அது­போல, சிங்­கப்­பூ­ரிலும், இந்­நி­று­வ­னத்­திற்கு ஒரு கிடங்கு உள்­ளது.
எஸ்.டி.ஐ.எக்ஸ்.,–ல் பதிவு செய்­துள்ள தர­கர்கள் மூல­மா­கவே, வைரங்­களில் முத­லீடு செய்­யவோ அல்­லது அவற்றின் வர்த்­த­கத்தில் ஈடு­ப­டவோ முடியும். தர­கர்கள், முத­லீட்­டா­ளர்­க­ளிடம் இருந்து பணம் பெற்று, எஸ்.டி.ஐ.எக்ஸ்.,–ல் டிபாசிட் செய்யும் பணி­யையும் மேற்­கொள்­கின்­றனர். வர்த்­தகம் புரிந்­தபின், அடுத்த மூன்­றா­வது நாளில், வாடிக்­கை­யா­ளரின் கணக்கில், வைரம் டிபாசிட் செய்­யப்­படும்.இவ்­வாறு அவர் கூறினார்.
நேற்று, மும்பை, லண்டன் உள்­ளிட்ட 10 நக­ரங்­களில், சிங்­கப்பூர் வைர சந்தை வாயி­லாக, வைர வர்த்­தகம் துவங்­கி­யது. மும்­பையில், பிற்­பகல் 12:00 மணிக்கு வர்த்­தகம் துவங்கி, 4:00 மணிக்கு முடி­வுற்­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)