பி.எப்., கணக்கு ஒருங்கிணைப்பு இனி மிகவும் எளிதுபி.எப்., கணக்கு ஒருங்கிணைப்பு இனி மிகவும் எளிது ... சிட்டி யூனியன் வங்கி வணிகம் ரூ.48,411 கோடியாக அதிகரிப்பு சிட்டி யூனியன் வங்கி வணிகம் ரூ.48,411 கோடியாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­ய­லாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2016
08:06

நான்­கா­வது கட்­ட­மாக வெளி­யிட இருப்­பது மற்றும் பங்­குச்­சந்­தையில் பரி­வர்த்­தனை செய்­வ­தற்­கான வாய்ப்பு உள்­ளிட்ட அம்­சங்கள் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் மீதான ஈர்ப்பை அதி­க­மாக்­குமா?
தங்க சேமிப்பு திட்­டங்­களை மேலும் பிர­ப­ல­மாக்கும் முயற்­சியில் அரசு ஈடு­பட்டு வரும் நிலையில், விரைவில் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் நான்காம் கட்­ட­மாக வெளி­யி­டப்­பட இருக்­கின்­றன. இம்­மாத இறுதி முதல் இந்த பத்­தி­ரங்கள் பங்­குச்­சந்­தையில் பட்­டி­ய­லி­டப்­பட்டு, பரி­வர்த்­தனை செய்­யப்­ப­டவும் உள்­ளன. இதனால் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் மீது முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் பர­வ­லான எதிர்­பார்ப்பு உண்­டா­கி­யுள்­ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்க டிபாசிட் திட்டம், தங்க சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தங்க நாணயம் ஆகிய மூன்று திட்­டங்கள் அறி­முகம் செய்­யப்­பட்டன. தங்­கத்தின் இறக்­கு­ம­தியை குறைப்பது மற்றும் இல்­லங்­க­ளிலும், கோவில்­க­ளிலும் முடங்கி கிடக்கும் தங்கத்தை, புழக்­கத்தில் கொண்டு வரு­வது ஆகி­யவை இந்த திட்­டங்­களின் முக்­கிய நோக்­க­மாக இருக்­கின்­றன.
தங்க பத்­தி­ரங்கள் தங்க டிபாசிட் திட்­டத்தின் கீழ், வங்கிகள் குறிப்­பிட்ட காலம் தங்­கத்தை டிபாசிட் செய்து அதற்­கான வட்­டியை பெற்­றுக்­கொள்­ளலாம். முதிர்வு காலத்தில் அப்­போ­தைய விலையில் தங்கம் பெற்­றுக்­கொள்­ளலாம்.நகை வடிவில் தங்கம் வாங்­கு­வ­தற்கு பதி­லாக, பத்­திர வடிவில் தங்­கத்தில் முத­லீடு செய்ய தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் வழி செய்­கின்­றன. ரிசர்வ் வங்கி மூலம் வெளி­யி­டப்­படும் இந்த பத்­தி­ரங்­களை, 2 கிராம் முதல் 500 கிராம் வரை முத­லீடு செய்­யலாம். இவற்றின் முதிர்வு காலம் 8 ஆண்­டு­களாகும். 5ம் ஆண்டு முதல் வெளி­யேறும் வாய்ப்பும் இருக்­கி­றது. முதிர்வு காலத்தில், அப்­போ­தைய தங்க விலைக்­கான தொகையை பெறலாம். மேலும், இடைப்­பட்ட காலத்தில், இந்த பத்­தி­ரங்­க­ளுக்கு 2.75 சத­வீத வட்­டியும் வழங்­கப்­படும். தேவை எனில், இவற்றை அட­மானம் வைத்தும் கடன் பெறலாம். வங்­கிகள் மற்றும் தபால் அலு­வ­ல­கங்கள் மூலம் இவற்றை வாங்­கலாம்.
இது­வரை கடந்த நவம்பர் மாதம் முதல் கட்டம் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் வெளி­யி­டப்­பட்டன. அதன் பிறகு மேலும் இரண்டு கட்­டங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இது­வரை 1,300 கோடி ரூபாய் இவற்றின் மூலம் திரட்­டப்­பட்­டுள்­ளது. முதல் கட்ட பத்­திரம் கிரா­முக்கு 2,682 ரூபாய் எனும் விலையில் வெளி­யா­னது. 999 துாய தங்கத்தின் சந்தை விலை அடிப்­ப­டையில் விலை நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது.இந்­நி­லையில், விரைவில் நான்­கா­வது கட்­ட­மாக தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் வெளி­யி­டப்­பட உள்­ளன. அண்­மையில் வங்­கிகள் மற்றும் ரிசர்வ் வங்­கி­யுடன் தங்க சேமிப்பு திட்­டங்கள் தொடர்­பாக நடத்­திய ஆலோ­ச­னைக்குப் பிறகு நிதி அமைச்­சகம் இவ்­வாறு முடிவு செய்­துள்­ளது. இந்த திட்­டங்கள் தொடர்­பான விழிப்பு­ணர்வை அதி­க­ரிக்­கவும் திட்­ட­மிடப்­பட்­டுள்­ளது. வங்­கிகள் இந்த திட்­டத்தை மேலும் தீவி­ர­மாக பங்­கேற்­கவும் கேட்டுக் கொள்­ளப்­பட உள்­ளன. சான்றிதழ்கள் வெளியிடப்படும் நடைமுறையும் எளிதாக்கப்பட உள்ளது.
முத­லீடு வாய்ப்பு மேலும், இம்­மாத இறு­தியில், தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களை பங்­குச்­சந்­தையில் பட்­டி­ய­லிட்டு பரி­வர்த்­தனை செய்­வதும் துவங்க உள்­ள­தாக நிதி அமைச்­சகம் சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இடைப்­பட்ட காலத்தில் தங்­கத்தின் மதிப்பு உயர்ந்­தி­ருப்­பது மற்றும் பங்­குச்­சந்தை பரி­வர்த்­தனை மூலம் விற்கும் வாய்ப்பு இந்த முறை இவற்றின் ஈர்ப்பை அதி­க­மாக்க வாய்ப்­பி­ருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது.தங்­கத்தில் முத­லீடு செய்­ப­வர்கள், நகை வடிவில் வாங்­கு­வதை விட, பத்­தி­ரங்­களை வாங்­கு­வது ஏற்­ற­தாக இருக்கும் என கருதப்ப­டு­கி­றது. முத­லீடு காலத்தில், வட்டி வரு­மானம் மற்றும் பத்­தி­ர­மாக இருப்பதால், பாது­காப்­பா­னது போன்ற அம்­சங்கள் சாத­க­மா­ன­தாக அமைந்­து உள்ளன. இவற்றின் வட்டி வரு­மானம் வரி விதிப்புக்கு உட்­பட்­டது என்­றாலும், முதிர்வின் போது இவற்றின் மீது ஆதாய பலன் வரி­வி­திப்பு கிடை­யாது.
மேலும், இவை பங்­குச்­சந்­தையில் பரி­வர்த்­தனை செய்­யப்­பட இருப்­பது தேவை எனில், இவற்றை விற்று பண­மாக்கு­வதை எளி­தாக்கும். இதன் கார­ண­மாக தங்­கத்தில் முத­லீடு செய்ய தீர்­மா­னித்­து உள்­ள­வர்­க­ளுக்கு இவை நல்ல வாய்ப்­பாக அமையும் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)