தனியார் மய­மாகும் இந்­திய சுற்­றுலா கழக ஓட்­டல்கள் தனியார் மய­மாகும் இந்­திய சுற்­றுலா கழக ஓட்­டல்கள் ... ரூபாயின் மதிப்பிலும் ஏற்ற - இறக்கம் ரூபாயின் மதிப்பிலும் ஏற்ற - இறக்கம் ...
மாறி­யது தேக்­க­நிலை: இந்­திய நிறு­வ­னங்கள் சுறு­சு­றுப்பு; விற்­பனை, லாபம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2016
07:34

புது­டில்லி : இந்­தாண்டு, ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்டில், இந்­திய நிறு­வ­னங்­களின் வர்த்­தக செயல்­பா­டுகள், அவை, தேக்க நிலையில் இருந்து மீண்டு, எழுச்சிப் பாதைக்கு திரும்­பு­வதை கோடிட்டு காட்­டி­யுள்­ளன.
கெய்ர்ன் எனர்ஜி, வேதாந்தா குழுமம், வங்­கிகள், நிதி மற்றும் பெட்­ரோ­லிய நிறு­வ­னங்கள் நீங்­க­லாக, பங்குச் சந்தை பட்­டி­யலில் உள்ள, 1,181 நிறு­வ­னங்கள் குறித்து, ஆய்வு செய்­யப்­பட்­டது.
உயர்ந்த வட்டி விகிதம் அதில், அந்த நிறு­வ­னங்­களின் நிகர லாபம், 2015 – 16ம் நிதி­யாண்டின், ஜன., – மார்ச் வரை­யி­லான, நான்­கா­வது காலாண்டில், முந்­தைய நிதி­யாண்டின், இதே காலாண்டை விட, 41.7 சத­வீதம், உயர்ந்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இதே காலத்தில், அவற்றின் விற்­பனை, 4.20 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது.மூலப்­பொ­ருட்கள் விலையில் ஏற்­பட்ட சரிவு, மிகச் சிறிய அளவில் உயர்ந்த வட்டி விகிதம் உள்­ளிட்ட கார­ணங்­களால், இந்த வளர்ச்சி சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது. இந்­நி­று­வ­னங்­களின் வருவாய் வளர்ச்சி, தொடர்ந்து, ஒன்­றரை ஆண்­டு­க­ளாக குறைந்து காணப்­பட்­டது. கடந்த, 2015, ஏப்., – ஜூன் நீங்­க­லாக, தொடர்ந்து ஒன்­பது காலாண்­டு­க­ளாக சரி­வ­டைந்த, புதிய குடி­யி­ருப்­பு­களின் விற்­பனை வளர்ச்சி, மதிப்­பீட்டு காலாண்டில் உயர்ந்து, நிறு­வ­னங்­களின் வருவாய் வளர்ச்­சிக்கு துணை புரிந்­துள்­ளது. ஓராண்­டிற்கும் மேலாக, மந்­த­ நி­லையில் இருந்த இரு சக்­கர வாகன விற்­பனை, கடந்த நான்கு மாதங்­க­ளாக உயர்ந்து வரு­கி­றது. இது, கிரா­மப்­பு­றங்­களில், இருசக்­கர வாக­னங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து வரு­வதை உணர்த்­து­கி­றது.
பொருட்­க­ளுக்­கான தேவைஇதே காலத்தில், நுகர்வோர் சாத­னங்­களின் விற்­ப­னையும், கிராமம், நகரம் என்ற பார­பட்­ச­மின்றி அதி­க­ரித்­துள்­ளது. மதிப்­பீட்டு காலத்தில், நிறு­வ­னங்களின், விரி­வாக்கச் செல­வி­னமும், அன்­னிய நேரடி முத­லீ­டு­களும் அதி­க­ரித்து வந்த போதிலும், ஏற்­று­மதி, தனியார் முத­லீடு மற்றும் பொருட்­க­ளுக்­கான தேவை குறைந்து இருந்­தது. இந்த நிலை­யிலும், நிறு­வ­னங்­களின் விற்­பனை மற்றும் லாபம் வளர்ச்சி கண்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த, 2012 ஜூன் முதல், மக்­க­ளிடம் அவ­சி­ய­மற்ற பொருட்­களை வாங்கும் போக்கு குறைந்து காணப்­பட்­டது. இது, கடந்த மூன்று மாதங்­க­ளாக மெல்ல மாறத் துவங்­கி­யுள்­ளது. அவ்­வகை பொருட்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளதை புள்ளி விவ­ரங்கள் காட்­டு­கின்­றன. பல முன்­னணி நிறு­வ­னங்கள், வளர்ச்சிப் பாதைக்கு திரும்பிக் கொண்­டி­ருப்­பது, ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.
பஜாஜ் ஆட்டோ நிறு­வ­னத்தின் லாப வரம்பு, 2016, ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்டில், 21.3 சத­வீதம் உயர்ந்­துள்­ளது. நடப்பு நிதி­யாண்டில், விற்­பனை, 18 சத­வீதம் உயர்ந்து, 46 லட்­ச­மாக அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மதிப்­பீட்டு காலாண்டில், எல் அண்டு டி நிறு­வ­னத்தின் வரு­வாயும், நிகர லாபமும், எதிர்­பார்த்­ததை விட, அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)