உயர் கல்வியில் பெற்றோர் ஆர்வம்உயர் கல்வியில் பெற்றோர் ஆர்வம் ... மொபைல் வாலெட்கள் மொபைல் வாலெட்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி ஆலோசனைகளை பெற்றோர் வழங்கலாமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
07:34

முத­லீட்டு விஷ­யங்­களில் நிதி ஆலோ­சனை பெறு­வது அவ­சியம். நிதி ஆலோ­ச­னை­களை யாரிடம் இருந்து பெறு­கிறோம் என்­பதும் முக்­கியம். பொது­வாக தெரிந்­த­வர்கள் மற்றும் நண்­பர்கள் சொல்­வதை வைத்துக் கொண்டு முத­லீட்டு முடி­வு­களை மேற்­கொள்­ளக்­கூ­டாது என்று கரு­தப்­ப­டு­கி­றது. ஏனெனில், அவர்கள் பரிந்­து­ரைக்கும் முத­லீட்டு சாதனம் சரி­யா­ன­தா­கவே இருந்­தாலும், எல்­லா­ருக்கும் அது பொருத்­த­மாக இருக்கும் என்று சொல்ல முடி­யாது. முத­லீட்டு சாத­னங்கள் ஒவ்­வொ­ரு­வரின் தேவை, இலக்கு மற்றும் நிதி சூழ­லுக்கு ஏற்ப மாறு­படும்.
முக்கிய கேள்விஇந்த இடத்தில் சுவா­ர­சி­ய­மான கேள்வி ஒன்று உண்­டா­கி­றது. பிள்­ளைகள், பெற்­றோரின் நிதி ஆலோ­ச­னையை ஏற்­க­லாமா?இந்­திய சமூக சூழலில் இது முக்­கி­ய­மான கேள்­வி­யா­கவும் அமை­கி­றது. பெரி­ய­வர்கள் சொல்­வதை கேட்டு நடக்க வேண்டும் என்­பது நமக்கு முக்­கியம். அதே போல, பெற்றோர் அறி­வு­ரைப்­படி பிள்­ளைகள் நடக்க வேண்டும் என்­பதும் நம் மரபு. மேலை நாடுகள் போல பிள்­ளைகள் வளர்ந்த பின், பெற்றோர் நம் கடமை முடிந்­தது என்­றில்­லாமல், முக்­கிய விஷ­யங்­களில் ஆலோ­சனை சொல்லி வழி­ந­டத்த அக்­கறை காட்­டு­கின்­றனர். இது, நிதி விஷ­யங்­க­ளுக்கும் பொருந்தும். அதே நேரத்தில் சம்­பா­திக்கத் துவங்­கி­­இருக்கும் இளம் ஊழி­யர்­க­ளுக்கு நிதி வழி­காட்­டு­தலும் தேவை. ஆனால், பெற்றோர் இதை அளிப்­பது சரி­யாக இருக்­குமா? பெற்­றோரை விட பிள்­ளைகள் மீது வேறு யாருக்கும் அதிக அக்­கறை இருக்க முடி­யாது என்­பது உண்மை தான். ஆனால், அவர்கள் அளிக்கும் நிதி ஆலோ­ச­னைகள் பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என்­பது நிச்­ச­ய­மில்லை. முதல் காரணம், கடந்த தலை­முறை சிந்­த­னையின் தாக்கம் அவர்கள் நிதி ஆலோ­ச­னை­யிலும் பிர­தி­ப­லிக்­கலாம். உதா­ர­ணத்­திற்கு, பங்­கு­களில் முத­லீடு செய்ய வேண்டாம்; அது ரிஸ்­கா­னது என அவர்கள் கரு­தலாம். வைப்பு நிதி போன்­றவை பாது­காப்­பா­னது என கூறலாம்.
ஆலோசனை சரியா?பங்­குகள் ரிஸ்க் நிறைந்த முத­லீடு என்­றாலும், அதிக பலன் தரக்­கூ­டி­யது என்­பதை மறந்­து­விடக் கூடாது. அது மட்டும் அல்­லாமல் பங்கு முத­லீட்டின் பலனை பெற, இளம் வயதில் அவற்றில் முத­லீடு செய்­வதே பொருத்­த­மாக இருக்கும். பங்­கு­களில் இல்­லா­விட்­டாலும், மியூச்­சுவல் பண்ட் மூலம் முத­லீடு செய்தால், நீண்ட கால முத­லீட்டின் பலனை பெறலாம். அது­போ­லவே, தங்கம் போன்ற முத­லீட்­டையும் அதிகம் வலி­யு­றுத்­தலாம். ஆனால், ஒரு­வ­ரு­டைய முத­லீட்டில் தங்கம் குறிப்­பிட்ட அளவு இருந்தால் போது­மா­னது என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. ஒரு சிலர், காப்­பீடு பெறு­வது தொடர்­பான மூட நம்­பிக்கை கொண்­டி­ருக்­கலாம். அதற்­காக எதிர்­கால பாது­காப்பை பெறாமல் இருக்கக் கூடாது.இதன் பொருள், பெற்றோர் நிதி ஆலோ­சனை வழங்கக் கூடாது என்­பதோ அல்­லது பிள்­ளைகள் அதை கேட்டு நடக்கக் கூடாது என்­பதோ அல்ல. கடன் வாங்­காதே மற்றும் அதிகம் செலவு செய்­யாமல் சேமித்து வை போன்ற பொது­வாக ஆலோ­ச­னை­களை கண்ணை மூடிக்­கொண்டு பின்­பற்­றலாம். மாறாக, குறிப்­பிட்ட முத­லீட்டு ஆலோ­ச­னை­களை கவ­ன­மாக கேட்டுக் கொண்டு, முத­லீட்டு வாய்ப்­பு­களின் பலன்கள் மற்றும் நிதி சூழல் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும்!

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)