நிதி ஆலோசனைகளை பெற்றோர் வழங்கலாமாநிதி ஆலோசனைகளை பெற்றோர் வழங்கலாமா ... ‘இ – காமர்ஸ்’ மூலம் காப்­பீடு திட்­டங்கள் ‘இ – காமர்ஸ்’ மூலம் காப்­பீடு திட்­டங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மொபைல் வாலெட்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
07:34

கையில் ஸ்மார்ட் போன் யுகத்தில் மொபைல் வாலெட்கள் வேக­மாக பிர­ப­ல­மாகி வரு­கின்­றன. பொருட்­களை வாங்க, கட்­டணம் செலுத்த, பணம் எடுக்க என, பல­வி­தங்­களில் இவை பயன்­ப­டு­கின்­றன. மொபைல் வாலெட் என்­பது டிஜிட்டல் வடி­வி­லான பர்ஸ் போன்­றது. மின்­னணு வடி­வி­லான பிரி­பைடு அக்­கவுண்ட் அல்­லது கார்டு என்றும் புரிந்து கொள்­ளலாம்.
என்ன செய்­யலாம்?* மின் கட்­டணம், குடிநீர் கட்­டணம், தொலை­பேசி கட்­டணம் உள்­ளிட்ட சேவை­க­ளுக்­கான கட்­டணம் செலுத்த பயன்­ப­டுத்­தலாம்* மொபைல் போன் மற்றும், ‘டிடிஎச்’ சேவைக்­கான ரீசார்ஜ் செய்­யலாம்* திரைப்­பட டிக்கெட், ரயில், பஸ் மற்றும் விமான டிக்கெட் முன்­ப­திவு செய்­யலாம். ஓட்டல் அறை­களை பதிவு செய்­யலாம் * ஒரு வாலெட்டில் இருந்து இன்­னொரு வாலெட்­டுக்கு அல்­லது வங்கி கணக்­கிற்கு பணம் அனுப்­பலாம் * இணை­யத்தில் பொருட்­களை வாங்க பயன்­ப­டுத்­தலாம். வாலெட் ஏற்­கப்­படும் கடை­க­ளிலும் பயன்­ப­டுத்­தலாம்* ஏஜன்ட்கள், ரீடைல் நிறு­வ­னங்கள் மற்றும் ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுக்­கலாம்.
எவ்­வ­ளவு தொகை?மொபைல் வாலெட்­களில் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய தொகைக்கு வரம்பு உண்டு. ரிசர்வ் வங்கி அடிப்­படை வாலெட்­க­ளுக்கு 10 ஆயிரம் ரூபாய் என, வரம்பு நிர்­ண­யித்­துள்­ளது. கே.ஒய்.சி., பூர்த்தி செய்­யப்­பட்ட வாலெட்­களில் ஒரு லட்சம் ரூபாய் வரை அனு­மதி உண்டு. வாலெட்கள் பரி­வர்த்­த­னைக்கு கட்­ட­ணமும் உண்டு.
எப்­படி பயன்­ப­டுத்­து­வது?* மொபைல் வாலெட் சேவையை தேர்வு செய்த பிறகு, அதன் செய­லியை ஸ்மார்ட் போனில் டவுன்­லோடு செய்து அதில் உறுப்­பி­ன­ராக பதிவு செய்து கொள்ள வேண்டும்* அதன் பிறகு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அல்­லது இணைய வங்கி சேவை மூலம் அதில் பணத்தை ஏற்ற வேண்டும். ஒரு சில சேவை­களில் ரொக்­க­மா­கவும் செலுத்­தலாம்* இனி, பரி­வர்த்­த­னை­களின் போது, பாஸ்வேர்ட் அல்­லது பின் எண் மூலம் பொருட்­களை வாங்க அல்­லது பணம் செலுத்த வாலெட்டை பயன்­ப­டுத்­தலாம்.
எத்­தனை வகை மொபைல் வாலெட் பிர­தா­ன­மாக மூன்று வகை­யாக அமை­கின்­றன.* குளோஸ்ட் வாலெட்: குறிப்­பிட்ட வர்த்­தக நிறு­வ­னத்தின் சேவைகள் மற்றும் பொருட்­களை வாங்க மட்­டுமே பயன்­ப­டுத்த முடியும். பணம் திரும்பி செலுத்­தப்­பட்­டாலும் அதே நிறு­வ­னத்­திடம் பயன்­ப­டுத்த முடி­யாது; ரொக்­க­மாக பணம் எடுக்க முடி­யாது. உதா­ரணம்: புக்­மைஷோ, மேக்­மை­டிரிப், பிளிப்கார்ட்.* செமி குளோஸ்ட்: நிதிச் சேவைகள் உட்­பட, சேவைகள் மற்றும் பொருட்­களை, சேவை நிறு­வனம் ஒப்­பந்தம் செய்து கொண்­டுள்ள குறிப்­பிட்ட வர்த்­தக நிறு­வ­னங்­க­ளிடம் இருந்து பெற பயன்­ப­டுத்­தலாம். பணத்தை ரொக்­க­மாக எடுக்க முடி­யாது. உதா­ரணம்: பேடிஎம், மொபி­குவிக், சிட்ரஸ், பேயு­மணி, ஆக்­சிஜென், எம்­பெசா* ஓபன் வாலெட்: பொருட்கள் மற்றும் சேவைகள் பெற பயன்­ப­டுத்­து­வ­தோடு, பணம் பெற அல்­லது ரொக்கம் எடுக்க பயன்­ப­டுத்­தலாம். வங்­கி­களால் வழங்­கப்­ப­டு­பவை. உதா­ரணம்: ஐ.சி.ஐ.சி.ஐ., பாக்கெட்ஸ், எச்.டி.எப்.சி., பாங்க் பேஜாப், எஸ்.பி.ஐ., பட்டி.
தொழில்­நுட்பம் மொபைல் வாலெட்கள் 3ஜி, வைபை, என்.எப்.சி., கியு.ஆர்., கோட், கிளவுட் என பல­வித தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி செயல்­ப­டு­கின்­றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)