மொபைல் வாலெட்கள்மொபைல் வாலெட்கள் ... ரிலையன்ஸ் பேமண்ட் வங்கி துவக்கம் ரிலையன்ஸ் பேமண்ட் வங்கி துவக்கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘இ – காமர்ஸ்’ மூலம் காப்­பீடு திட்­டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
07:35

காப்­பீடு திட்­டங்­களின் வீச்சை மேலும் பர­வ­லாக்கும் வகை­யில், ‘இ – காமர்ஸ்’ மூலம் காப்­பீடு திட்­டங்­களை விற்­பனை செய்­வ­தற்­கான வரைவு நெறி­மு­றைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
இ – காமர்ஸ் எனப்­படும் இணையம் மூலம் பொருட்கள் மற்றும் சேவை­களை வாங்­கு­வது வேக­மாக பிர­ப­ல­மாகி வரு­கி­றது. ‘ஸ்மார்ட் போன்’­களின் பெருக்­கத்தால் கிரா­மப்­பு­றங்­களில் உள்­ள­வர்கள் கூட எளி­தாக இ – காமர்ஸ் வச­தியை பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­கி­றது. ரயில் டிக்­கெட்டில் துவங்கி, பல வகை­யான சேவை­களை இ – காமர்ஸ் மூலம் பெற முடி­கி­றது. இந்த வரி­சையில் காப்­பீடு திட்­டங்­களும் இணைய உள்­ளன.
விரைவில், காப்­பீடு திட்­டங்­க­ளையும், இ – காமர்ஸ் மூலம் எளி­தாக வாங்கும் நிலை உரு­வாக உள்­ளது. இதற்கு வழி செய்யும் வகையில் இந்­திய இன்­சூரன்ஸ் ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இ – காமர்ஸ் மூலம் காப்­பீடு திட்­டங்­களை விற்­பனை செய்­வ­தற்­கான வரைவு நெறி­மு­றை­களை வெளி­யிட்­டுள்­ளது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளி­யி­டப்­பட்ட இந்த வரைவு நெறி­மு­றைகள் மீது, 20ம் தேதி வரை கருத்­துக்­க­ளையும் கேட்­டி­ருந்­தது.
இணைய வழிஏற்­க­னவே பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான செபி, மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களை இ – காமர்ஸ் முறையில் விற்­பனை செய்ய அனு­ம­திப்­ப­தற்­கான யோச­னையை பரி­சீ­லித்து வரு­கி­றது. இந்­நி­லையில், காப்­பீடு திட்­டங்­களின் வீச்சை பர­வ­லாக்கும் வகையில் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இ – காமர்ஸ் மூலம் காப்­பீடு திட்­டங்­களை விற்­பனை செய்­வ­தற்­கான வரைவு நெறி­முறை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. இ – காமர்ஸ் மூல­மான விற்­பனை பரி­வர்த்­தனை செல­வு­களை குறைப்­ப­தோடு, செயல்­திறன் மற்றும் வீச்சை அதி­க­மாக்கும் என்றும் ஆணையம் தெரி­வித்­துள்­ளது.
முக்­கிய அம்­சங்கள் வரைவு நெறி­மு­றை­களின் படி, இ – காமர்ஸ் மூலம் காப்­பீடு திட்­டங்கள் விற்­ப­னைக்கு, ‘செல்ப் நெட்வொர்க் பிளாட்பார்ம்’ எனும் இணைய மேடை உரு­வாக்­கப்­படும். இந்த மேடை இணை­ய­த­ள­மாக அல்­லது மொபைல் போன் செய­லி­யாக அல்­லது இரண்­டு­மாக இருக்­கலாம். இணையம் மூலம் காப்­பீடு திட்­டங்கள் விற்க விரும்பும் நிறு­வ­னங்கள், ஆணை­யத்­திடம் பதிவு செய்து கொண்டு அதற்­கான அங்­கீ­கார சான்­றிதழ் பெற வேண்டும். காப்­பீடு முக­வர்கள், காப்­பீடு இடைத்­த­ரகர் அமைப்­புகள் உள்­ளிட்ட நிறு­வ­னங்கள் இவ்­வாறு பதிவு செய்து கொண்டு இ – காமர்ஸ் மூலம் காப்­பீடு திட்­டங்­களை வழங்­கலாம்.
இ – காமர்ஸ் நிறு­வ­னங்­களும் இவ்­வாறு வழங்க முடியும். முக­வர்கள் இணையம் மூலம் காப்­பீடு திட்­டங்­களை வழங்கும் போது, அவர்கள் சார்ந்த நிறு­வனம் சார்­பா­கவே விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தாக அது கரு­தப்­படும். எனினும், இ – காமர்ஸ் முறையில் காப்­பீடு திட்­டங்கள் வாங்க, மின்­னணு காப்­பீடு கணக்கு அவ­சியம். அதே நேரத்தில் காகித கையெ­ழுத்து வடிவம் தேவை­யில்லை; டிஜிட்டல் கையெ­ழுத்து அல்­லது ஒரு முறை பாஸ்­வேர்டு ஏற்றுக் கொள்­ளப்­படும். இந்த முறையில் விற்­கப்­படும் திட்­டங்கள் அதன் வேறு­பாட்டை குறிக்கும் வகையில், அவற்­றுக்கு முன், ஐ எனும் எழுத்தால் குறிக்­கப்­பட வேண்டும்.
மேலும், இ – காமர்ஸ் காப்­பீடு திட்­டங்­க­ளுக்கு தனி விலை­யையும் காப்­பீடு நிறு­வ­னங்கள் கையா­ளலாம். இப்­போது, இணையம் மூலம் விற்­கப்­படும் காப்­பீடு திட்­டங்­க­ளுக்கு மாறு­பட்ட விலை அனு­மதி இல்லை. எனவே, இந்த மாற்றம் கார­ண­மாக இ – காமர்ஸ் மூலம் காப்­பீடு திட்­டங்கள் வாங்­கும்­போது அவற்றின் விலை குறை­வாக இருக்கும் வாய்ப்­புள்­ளது.
சாதகம் என்ன? இந்த நிறு­வ­னங்கள் பாலிசி விற்­பனை மற்றும் பாலிசி விற்­பனை தொடர்­பான சேவை­களை அளிக்கும். பாலிசி தொடர்­பான விவ­ரங்கள் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டி­ருக்க வேண்டும். வாடிக்­கை­யாளர் மதிப்­புரை மற்றும் ரேட்டிங் ஆகி­ய­வையும் அனு­ம­திக்­கப்­படும் என, குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது. பிரீ­மியம் தொகை ரொக்­க­மாக செலுத்த முடியாது. ‘கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு’ அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மின்­னணு வடிவில் இருக்க வேண்டும்.
காப்­பீடு துறை வல்­லு­னர்கள் இந்த வரைவு நெறி­மு­றைகள் நல்ல முன்­னேற்றம் என்று தெரி­வித்­துள்­ளனர். இந்­தி­யாவில் இன்­னமும் காப்­பீடு வசதி முழு­வதும் பர­வ­லா­காத நிலையில், இந்த முயற்சி, காப்­பீடு திட்­டங்­களின் வீச்சை மேலும் அதி­க­மாக்கும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. எனினும், வரைவு நெறி­மு­றையில் பல்­வேறு அம்­சங்களில் மேலும் தெளிவு தேவை என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. மின்­னணு காப்­பீடு கணக்கு அவ­சியம் என்­பது இந்த முறையை சிக்­க­லாக்கும் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)