பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
01:53
புதுடில்லி : நுகர்வோர் சேவையை பொறுத்தவரை, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்கள், தொலைத்தொடர்பு சேவைகளுக்குத் தான் அதிகம் செலவழிப்பதாக, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிராமப்புறங்களில்...கிராமப்புறங்களில், 47,535 வீடுகள் மற்றும் நகர்ப்புறங்களில், 36,065 வீடுகளின் செலவினங்கள் குறித்து, போக்குவரத்து, பலதரப்பட்ட நுகர்வோர் சேவைகள், பிற சேவைகள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆகிய, நான்கு பிரிவு களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், நுகர்வோர் சேவைகளுக்கான செலவில், கிராமப்புறத்தினர் மிக அதிகமாக, தொலைத்தொடர்பு சேவைக்கு, 25.33 சதவீதம் செலவிடுவது தெரியவந்துள்ளது. இது, நகர்ப்புறத்தில், 26.33 சதவீதமாக உள்ளது.
அதுபோல, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில், தனிநபரின் மாதாந்திர சராசரி செலவிலும், தொலைபேசி, மொபைல் போன் சேவைகள் தான் முதலிடத்தை பிடித்துள்ளன. இவ்வகை சேவைகளுக்கு, தனிநபரின் மாதாந்திர செலவு, கிராமப்புறங்களில், 36.35 ரூபாயாகவும், நகர்ப்புறங்களில், 102.46 ரூபாயாகவும் உள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறமக்களின் போக்குவரத்து செலவை பொறுத்தவரை, பேருந்து, ஆட்டோ ரிக் ஷா, டாக்சி, ரயில் ஆகியவை, 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைக் ண்டுள்ளன.
தொலைத்தொடர்பு சாதனங்கள்இருதரப்பு மக்களின் வீட்டு பயன்பாட்டு சாதனங்களுக்கான செலவில், போக்குவரத்து சாதனங்கள், முதலிடத்தை பிடித்துள்ளன. அடுத்து நகைகள், குளிர் மற்றும் வெப்ப சாதனங்கள், மின் உற்பத்தி சாதனங்கள், ஐ.டி., மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள், வீட்டு மரச்சாமான்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|