பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
23:47
சென்னை : ‘ராயல் என்பீல்டு’ வாகன உதிரி பாகங்கள், பிளிப்கார்ட் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம், இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு டில்லி, மும்பை, பெங்களூரு, சண்டிகர், அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் முகவர்கள் உள்ளனர். அங்கு, வாகனத்தை ஓட்டும்போது அணிய கூடிய கிளவுஸ், டீ சர்ட் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்நிலையில், என்பீல்டு நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள், பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்கப்பட உள்ளன. இதுகுறித்து, பிளிப்கார்ட் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், இணையதளம் வாயிலாக, 3.50 லட்சம் மோட்டார் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்கிறது. ராயல் என்பீல்டு கூட்டு மூலம், அந்த நிறுவனத்தின் தரமான உதிரிபாகங்கள், வாகனத்தின் போது அணிய கூடிய ஆடைகள் ஆகியவை, எங்கள் இணையதளத்தில் விற்கப்படும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள், எங்கிருந்தாலும், ராயல் என்பீல்டு உதிரிபாகங்களை வாங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|