சிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கைசிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கை ... பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால்; ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால்; ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ஆய்­வ­றிக்கை தகவல் வெளிப்­ப­டை­யான ரியல் எஸ்டேட் துறை இந்­தியா 36வது இடத்­திற்கு முன்­னே­றி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2016
00:33

மும்பை:‘மத்­திய அரசின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களால், இந்­திய ரியல் எஸ்டேட் துறையின் செயல்­பா­டு­களில் வெளிப்­படைத் தன்மை அதி­க­ரித்­துள்­ளது; அதனால், ஒளி­வு­ம­றை­வற்ற ரியல் எஸ்டேட் நடை­மு­றை­களை பின்­பற்றும், முதல் நிலை நக­ரங்­களை கொண்ட நாடு­களின் பட்­டி­யலில், இந்­தியா, 36வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது’ என, ஜோன்ஸ் லேங் லாசல் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
இந்­நி­று­வனம், சர்­வ­தேச ரியல் எஸ்டேட் துறையின் வெளிப்­ப­டை­யான செயல்­பா­டுகள் குறித்த, ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்­டுஉள்­ளது. அதன் விவரம்:
இந்­தி­யாவில், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நக­ரங்­களில், ரியல் எஸ்டேட் துறை நட­வ­டிக்­கை­களில், வெளிப்­ப­டைத்­தன்மை அதி­க­ரித்­துள்­ளது. இத்­த­கைய சூழல் உள்ள, சர்­வ­தேச முதல் நிலை நக­ரங்­களில், இந்­தியா, 36வது இடத்தை பிடித்­துள்­ளது. இந்­தி­யாவின், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நக­ரங்கள், முறையே, 39 மற்றும் 52வது இடங்­களை பிடித்­துள்­ளன.
இந்­திய ரியல் எஸ்டேட் துறை தொடர்­பாக கிடைக்கும் விவ­ரங்கள், அசையா சொத்­து­களின் பரி­வர்த்­தனை சார்ந்த நடை­மு­றைகள், ஒழுங்­கு­முறை மற்றும் சட்ட விதி­மு­றைகள் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில், இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்பட்­டுள்­ளது. இந்­தி­யாவில் ஒட்­டு­மொத்­த­மாக அனைத்து நக­ரங்­க­ளிலும், ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்­ப­டை­யான செயல்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளன. இதற்கு, அனைத்து நில ஆவ­ணங்­களும், ‘டிஜிட்டல்’ முறைக்கு மாற்­றப்­பட்டு, ‘ஆன்லைன்’ மூலம் வெளி­யி­டப்­ப­டு­வது, முக்­கிய கார­ண­மாகும்.
மேலும், 2014ல், பார்லி.,யில் நிறை­வேற்­றப்­பட்ட, நிலம் கைய­கப்­ப­டுத்­துதல், மறு­வாழ்வு, மறு­கு­டி­ய­மர்த்தல் சட்டம் கார­ண­மாக, நிலம் வாங்கும் நடை­மு­றைகள் சுல­ப­மா­கி­யுள்­ளன.நில விற்­ப­னையில், உரி­மை­யா­ள­ருக்கு நல்ல விலை கிடைக்­கி­றது. ரியல் எஸ்டேட் துறை கொள்­கை­களில் மேற்­கொள்­ளப்­பட்ட சீர்­தி­ருத்­தங்­களும், அன்­னிய நேரடி முத­லீட்­டிற்­கான கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­பட்­டதும், இத்­து­றைக்கு வலு­சேர்த்­து உள்­ளன.
ரியல் எஸ்டேட் தக­வல்­களை பொது­மக்கள் அறி­வ­தற்­கான வசதி, ‘டிஜிட்டல்’ நில ஆவ­ணங்கள், ரியல் எஸ்டேட் இன்­வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் துவக்கம் போன்ற, மத்­திய அரசின் பல்­வேறு செயல்­பா­டுகள் பாராட்­டத்­தக்­கது.
இந்­நி­லையில், 2016, ரியல் எஸ்டேட் ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு சட்டம், அனைத்து மாநி­லங்­க­ளிலும் முழு­மை­யாக அம­லுக்கு வரு­கின்ற சூழலில், ஒட்­டு­மொத்த ரியல் எஸ்டேட் துறையின் வெளிப்­படை தன்­மையில் மேலும் முன்­னேற்றம் ஏற்­படும். இதன் கார­ண­மாக, 2016 – 18ம் ஆண்­டுக்­கான அடுத்த ஆய்வில், ரியல் எஸ்டேட் துறையின் வெளிப்­படை தன்­மையில், இந்­தியா மேலும் சிறப்­பான இடத்தை பிடிக்கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி : மத்­திய அரசு, கறுப்­புப் பண ஒழிப்பு நட­வ­டிக்­கையை, மேலும் தீவி­ரப்­ப­டுத்­தும் நோக்­கில், ... மேலும்
business news
மும்பை : மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, நேற்று முதன்­மு­றை­யாக, 35 ஆயி­ரம் புள்­ளி­களை ... மேலும்
business news
புதுடில்லி : ரியல் எஸ்­டேட் துறையை, ஜி.எஸ்.டி.,யில் சேர்ப்­பது குறித்து, இன்று முக்­கிய முடிவு எடுக்­கப்­படும் என, ... மேலும்
business news
புதுடில்லி : ‘‘அடுத்த, 8 – 9 ஆண்­டு­களில், நாட்­டின் பொரு­ளா­தா­ரம், 5 லட்­சம் கோடி டால­ராக வளர்ச்சி காணும்,’’ என, ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த, 2017 நவம்­ப­ரில், 178 பொருட்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)