அதிக ஊழி­யர்கள் எண்­ணிக்­கையில் டி.சி.எஸ்., முத­லிடம் வகிக்­கி­றதுஅதிக ஊழி­யர்கள் எண்­ணிக்­கையில் டி.சி.எஸ்., முத­லிடம் வகிக்­கி­றது ... வரும் 2020ம் ஆண்டில்.. வேளாண் ரசாயன பொருட்கள் சந்தை 630 கோடி டாலராக வளர்ச்சி காணும் வரும் 2020ம் ஆண்டில்.. வேளாண் ரசாயன பொருட்கள் சந்தை 630 கோடி டாலராக வளர்ச்சி ... ...
‘ஜபாங்’ வலை­தள நிறு­வ­னத்தை ‘மைந்த்ரா’ வளைத்து போட்­டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2016
01:28

மும்பை : ‘ஜபாங்’ வலை­தள நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக, ‘மைந்த்ரா’ வலை­தள நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
இதன் மூலம், நவ­நா­க­ரிக ஆடைகள், கால­ணிகள், ‘பேஷன்’ பொருட்கள் உள்­ளிட்­ட­வற்றை விற்­பனை செய்யும், மிகப்பெரிய வலை­தள நிறு­வ­ன­மாக, மைந்த்ரா உரு­வெ­டுத்­துள்­ளது.
பிர­மிக்­கத்­தக்க வளர்ச்­சி:இந்த ஒப்­பந்­தத்தில், 470 கோடி ரூபாய் (7 கோடி டாலர்) கைமா­றி­யுள்­ளது. கான்பூர் ஐ.ஐ.டி., மாண­வ­ரான முகேஷ் பன்சால், தன் நண்­பர்கள், அசுதோஷ் லவா­னியா, வினீத் சக்­சேனா ஆகி­யோ­ருடன் இணைந்து, 2007ல், மைந்த்ரா வலை­த­ளத்தை, 30 லட்சம் ரூபாய் முத­லீட்டில் துவக்­கினார். அன்­ப­ளிப்பு பொருட்­களின் மொத்த விற்­ப­னையில் ஈடு­பட்ட மைந்த்ரா, 2010ல், ஆடைகள், கைக்­க­டி­கா­ரங்கள், அழகு சாத­னங்கள் உள்­ளிட்­ட­வற்றின் சில்­லரை விற்­ப­னையில் இறங்கி, குறு­கிய காலத்தில், பிர­மிக்­கத்­தக்க வளர்ச்­சியை கண்­டது. இதை­ய­டுத்து, 2014ல், மைந்த்ரா வலை­த­ளத்தை, ‘பிளிப்கார்ட்’ நிறு­வனம், 2,000 கோடி ரூபாய்க்கு கைய­கப்­ப­டுத்­தி­யது. இன்று, பிளிப்கார்ட் நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மாக, மைந்த்ரா செயல்­பட்டு வரு­கி­றது.
கடந்த, 2012ல், பிரவீன் சின்ஹா, லஷ்மி பொட்­லுாரி, சந்­தி­ர­மோகன் ஆகியோர், குளோபல் பேஷன் குழு­மத்தின் கீழ், ‘ஜபாங்’ வலை­தள நிறு­வ­னத்தை உரு­வாக்­கினர்.இந்­நி­று­வனம், ஆடைகள், அழகு சாத­னங்கள், கால­ணிகள், நகைகள், உட்­பட, 1,500க்கும் அதி­க­மான சர்­வ­தேச ‘பிராண்­டு’­­களின், 90 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான பொருட்­களை, விற்­பனை செய்து வரு­கி­றது.
தன்­னி­க­ரற்ற நிறு­வ­ன­மாக...மூன்று ஆண்­டு­களில், 100 கோடி டாலர் வர்த்­தக நிறு­வ­ன­மாக, ஜபாங் உரு­வெ­டுத்­துள்­ளது. இதை, கைய­கப்­ப­டுத்­தி­யதன் மூலம், இந்­தி­யாவில், வலை­தளம் வாயி­லாக, நவ­நா­க­ரிக ஆடைகள், அலங்காரப் பொருட்கள் உள்­ளிட்­ட­வற்றின் விற்­ப­னையில், தன்­னி­க­ரற்ற நிறு­வ­ன­மாக, மைந்த்ரா உரு­வெ­டுத்­து உள்­ளது. இது, தாய் நிறு­வ­ன­மான பிளிப்­கார்டை மேலும் வலுப்­ப­டுத்தி, அமேசான் நிறு­வ­னத்தின் போட்­டியை சமா­ளிக்­கவும் துணை புரிந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)