பதிவு செய்த நாள்
24 ஆக2016
00:04
புதுடில்லி : பிரியா சிமென்ட் நிறுவனம், புதிய வணிகச் சின்னத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனத்தின், பிராண்டு பிரிவு துணை மேலாளர் சுஜித்குமார் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: பிரியா சிமென்ட் நிறுவனத்தின், 30வது ஆண்டு விழாவையொட்டி, புதிய வணிக சின்னம் மற்றும் விளம்பர வாக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரியா சிமென்ட், தலைமுறைகளை கடந்து, வாடிக்கையாளர்களின் மனதில் என்றும் அழியாமல் நிலைத்திருக்கிறது.
அதை குறிக்கும் வகையில், மிகப் பிரகாசமான வட துருவ நட்சத்திரம், நிறுவனத்தின் வணிக சின்னமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. செவ்வண்ண நட்சத்திரத்தின் ஐந்து முனைகளும், பூமியைக் காக்கும் பஞ்ச பூதங்களை குறிக்கும். அதில் ஒருமுனை, விண்ணோக்கிய அம்புக் குறியாக, பூச்சு வேலைக்கு உதவும் சாந்து கருவி போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வலிமை, நவீனம், நம்பிக்கை ஆகியவற்றை, புதிய வணிகச் சின்னம் பிரதிபலிக்கும்.பிரியா சிமென்ட், வாடிக்கையாளர் நெஞ்சில் நிலைத்திருக்கும் என்பதை குறிக்க, ‘லிவ்ஸ் பார்எவர்’ என்ற விளம்பர வாக்கியத்தை தேர்வு செய்துள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|